விற்பனைக்கு வந்தது புதிய ஐக்யூ 5ஜி போன்.. 7200எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி (iQOO Z11xa 5G) ஸ்மார்ட்போன் இன்று அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளது. இப்போது ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி அம்சங்கள் (iQOO Z11xa 5G specifications): 6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1200 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் (MediaTek Dimensity 7400-Turbo chipset) உடன் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி சோனி IMX852 மெயின் கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதுவும் இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன்ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
7200எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி போனின் விலை ரூ.28,999-ஆக உள்ளது. தற்போது இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஐக்யூ இசட்11எக்ஸ்ஏ 5ஜி மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். மேலும் டைட்டன் பிளாக் மற்றும் பிரிஸ்மாடிக் கிரீன் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications
