மொத்த பேரும் வெயிட்டிங்.. ரூ.23,000 பட்ஜெட்ல 256GB ரேம்.. டைமன்சிட்டி 7400 டர்போ.. ஓர்ஜின்ஓஎஸ்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் புதிய மாடலான ஐக்யூ இசட்11எக்ஸ் (iQOO Z11x) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் செக்மெண்ட் மட்டுல்லாமல், சிப்செட், ரேம், மெமரி மற்றும் ஓஎஸ் விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பட்ஜெட் விலை மாடலாக ஐக்யூ இசட்10எக்ஸ் (iQOO Z10x) ஸ்மார்ட்போன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், அடுத்த மாடலான ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், பட்ஜெட் விலையில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட்கள் இந்த ஐக்யூ மாடல்களில் கிடைக்கும்.

இப்போது, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ (Octa Core MediaTek Dimensity 7400 Turbo) சிப்செட்டுடன் இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், பட்ஜெட் விவரங்கள், சிப்செட், டிசைன், ரேம், மெமரி மற்றும் ஓஎஸ் விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன.
ஐக்யூ இசட்11எக்ஸ் அம்சங்கள் (iQOO Z11x Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் (OriginOS) இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. ரூ.23,000 பட்ஜெட்டுக்கும் கீழ் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது.
இந்த விவரங்கள் மட்டுமே மைக்ரோசைட் வழியாக தெரியவந்துள்ளன. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்களையும் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. இப்போது, ஐக்யூ இசட்10எக்ஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z10x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது.
ஆகவே, ஐக்யூ இசட்11எக்ஸ் மாடலிலும் இதே செட்டப் எதிர்பார்க்கலாம். 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 6.72 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL-STD-810H சர்டிபிகேஷனை இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் இன்பிராகெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








