வெச்சான் பாரு iQOO.. 8 ஜிபி ரேம்.. டைமன்சிட்டி 7400 சிப்செட்.. அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்களுக்கு அடுத்த பட்ஜெட் விலை மாடலாக ஐக்யூ இசட்11எக்ஸ் (iQOO Z11x) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் மாலி ஜிபியு உள்ளிட்ட பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
Geekbench தளத்தில் முக்கிய பீச்சர்கள் தெரியவந்துள்ளன. ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஆகவே, முதலில் சீன மார்கெட்டிலும் பிறகு இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்க்கலாம். இப்போது, Geekbench தளத்தின் வழியாக கசிந்த பீச்சர்களை பார்ப்போம்.

ஐக்யூ இசட்11எக்ஸ் அம்சங்கள் (iQOO Z11x Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (Octa Core MediaTek Dimensity 7400) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பீச்சர்கள் மட்டுமே Geekbench வழியாக தெரியவந்துள்ளது. ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போனானது, இந்தியாவில் வெளியாகி உள்ளது. ஆகவே, இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனை இங்கு எதிர்பார்க்கலாம். இப்போது, ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,499 ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.16,000 பட்ஜெட்டில் ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனை இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.
ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z10x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6.72 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவை இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங், 8 எம்பி கேமரா கொடுத்துள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. அல்ட்ரா மரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications