Home
Mobile

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது iQOO 5ஜி போன்.. 7200mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ நிறுவனம் நாளை (மார்ச் 12) இந்தியாவில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகமாகும். மேலும் அமேசான் தளத்தில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள் ( iQOO Z11x 5G specifications): 6.76-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் (Dimensity 7400 Turbo chipset) உடன் புதிய ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் ஜிபியு வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய 5ஜி போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் அறிமுகமாகும். 400% ஆடியோ பூஸ்டர் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

7200mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் ரூ.20,999-விலையில் அறிமுகமாகும். மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.22,999 விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11x 5G with 7200mAh battery to launch in India tomorrow: Check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X