Home
Mobile

அமேசான் சுதந்திர தின சேல்.. ரூ.2,500 ஆஃபரில் 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடக்கும் கிரேட் ஃப்ரீடம் சேலில் (Amazon Great Freedom Sale) பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைத்து, விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 10 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.27,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,499 விலைக்கு இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

அமேசான் சுதந்திர தின சேல்.. ரூ.2,500 ஆஃபரில் 7200mAh பேட்டரி மாடல்!

ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z11x 5G Specifications): 6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டை விட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கும். மேலும், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் மட்டுமல்லாமல், 4கே வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி ஃப்ரன்ட் கேமராவை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டியூரபிலிட்டி பீச்சர்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு ஏற்றபடி எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் உள்ளது. மேலும் 219 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கிறது. டைட்டன் பிளாக் (Titan Black), பிரிஸ்மேட்டிக் கிரீன் (Prismatic Green) கலரில் வாங்கலாம். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வேஎல்இடி கனெக்டிவிட்டி உள்ளது. வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Z11x 5G With 7200mAh Battery Available At Rs 2500 Discount On Amazon Great Freedom Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X