ஆஃபரில் iQOO 5ஜி போன்.. சோனி கேமரா.. 7200mAh பேட்டரி..IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
இப்போது அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z11x 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் (Dimensity 7400 Turbo chipset) உடன் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கி டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்டபோன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
அதுவும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன்.
7200mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications