பொளந்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.17,498 போதும்.. 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் புதிய மாடலான ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. பெரிய பேட்டரியை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப 7200mAh பேட்டரியை கொடுக்கிறது. மேலும், 44W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, 120Hz டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பெரிய பேட்டரி
இந்தியாவில் அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் ஐக்யூ நிறுவனத்துக்கு தனியிடம் இருக்கிறது. இசட் சீரிஸ் மாடல்களில் பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி கிடைக்கிறது. இதில் ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 7200mAh பேட்டரி மட்டுமல்லாமல், மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

சூப்பர் பேட்டரி சேவர் மோட் (Super Battery Saver Mode), ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 6 மணி நேரங்களுக்கு கால்களை செய்து கொள்ளும்படி பேக்கப் கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் தள்ளுபடியில் கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 34 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,998 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,498 விலைக்கு வாங்கி கொள்ளலாம். டைட்டன் பிளாக் (Titan Black), பிரிஸ்மேட்டிக் கிரீன் (Prismatic Green) கலரில் வாங்கலாம்.
ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள்
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது.
6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.
4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 7200mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் வருகிற IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைத்து உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்து உள்ளது.
8.39 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை கொடுத்து உள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.


Click it and Unblock the Notifications








