ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 7200mAh பேட்டரி.. சோனி கேமரா.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நாளை (ஆகஸ்ட் 7) அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026 (amazon great freedom sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) மாடலும் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.
அதாவது ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாளை நடைபெற உள்ள அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026 எனும் சிறப்பு விற்பனையில் இந்த ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.22,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z11x 5G specifications): ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் (Dimensity 7400 Turbo chipset) உடன் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
குறிப்பாக OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
அதுவும் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கி டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்டபோன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற பல சிறப்பான வசதிகள் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன்.
ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் 7200mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications