Home
Mobile

நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய iQOO 5ஜி போன்.. 7200mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

சமீபத்தில் இந்தியாவில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய போன் நாளை (மார்ச் 16) முதல் முறையாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த போனை நாளை மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z11x 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் (Dimensity 7400 Turbo chipset) உடன் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய iQOO 5ஜி போன்..

அதேபோல் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

அதுவும் 6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்டபோன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கி டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த புதிய போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன்.

நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய iQOO 5ஜி போன்..

மேலும் 7200mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.20,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.22,999 விலையிலும் விற்பனை செய்யப்படும். டைட்டன் பிளாக் மற்றும் பிரிஸ்மாடிக் கிரீன் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11x 5G phone will go on sale for the first time tomorrow: check price, specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X