ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
பெரிய பேட்டரி கொண்ட மாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் ஐக்யூ நிறுவனமானது, முதலாவது 10000mAh பேட்டரி மாடலை களமிறக்க இருக்கிறது. இந்த மாடலின் முக்கிய பீச்சர்கள் வெளியீட்டுக்கு முன்பே தெரிய வந்துள்ளன.
சீன மார்கெட்டில் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று ஐக்யூ இசட்11எஸ் (iQOO Z11S) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த மாடலுடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா (iQOO Neo 11 Ultra) வெளியாக இருக்கிறது. இருப்பினும், ஐக்யூ இசட்11எஸ் ஸ்மார்ட்போனானது, 10000mAh பேட்டரியுடன் ஒட்டுமொத்த கவனத்தையும் தட்டி சென்றுவிட்டது.

ஐக்யூ இசட்11எஸ் அம்சங்கள் (iQOO Z11S Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83 இன்ச் டிஸ்பிளேவை இந்த ஐக்யூ இசட்11எஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் கிடைக்கிறது. எஸ்ஜிஎஸ் லோவ் ப்ளூ லைட் (SGS Low Blue Light) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், லோவ் ஃபிளிக்கர் சர்டிபிகேஷன் (Low Flicker Certifications) கொண்ட டிஸ்பிளேவாகவும் கிடைக்க இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரியை இந்த ஐக்யூ இசட்11எஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 (Octa Core MediaTek Dimensity 7500) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்11எஸ் மாடல் கொண்டுள்ளது.
12 ஜிரேம் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. ஒயிட் (White), பிளாக் (Black) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. மற்ற பீச்சர்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு முன்பாக தெரியவரும். இந்திய மார்கெட்டில் இந்த ஐக்யூ இசட்11எஸ் மாடல் வெளியாகலாம்.
ஏனென்றால், ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்த மாடல் விற்பனைக்கு வந்து பிறகு வரவேற்பை பொறுத்து ஐக்யூ இசட்11எஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு நிர்ணயம் செய்யப்படும். இப்போது, ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனின் கிடைக்க இருக்கும் பீச்சர்கள் பார்க்கலாம்.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ (Octa Core MediaTek Dimensity 7500 Turbo) சிப்செட்டுடன் வெளியாக இருக்கிறது. 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11 அறிமுகம் செய்யப்பட உள்ளது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொண்டிருக்கிறது. டூயல் ரியர் கேமராவை கொடுக்க இருக்கிறது.
அரோரா கிரீன் (Aurora Green) மற்றும் செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியீட்டுக்கு பிறகு அமேசான் தளத்திலேயே விற்பனைக்கு கிடைக்கும். அதேபோல ஐக்யூ தளத்திலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications