iQOO போட்ட போடு.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 13MP கேமரா.. 6GB ரேம்.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படியான பட்ஜெட்டில் ஐக்யூ இசட்11ஐ (iQOO Z11i) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 6500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 13 எம்பி கேமரா மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளிட்ட பீச்சர்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஐக்யூ இசட்11ஐ ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் ஐக்யூ இசட் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சீன மார்கெட்டில் முதலில் வெளியாகி பிறகு இந்தியாவில் கிடைக்கும். அதன்படி சீன மார்கெட்டில் இப்போது ஐக்யூ இசட்11ஐ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ப பீச்சர்கள் மற்றும் விலை இருக்கிறது.

ஐக்யூ இசட்11ஐ அம்சங்கள் (iQOO Z11i Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்11ஐ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது.
ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) பேக் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ இசட்11ஐ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 கலர் டெப்த் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் போட்டோ மோட் (Photo Mode) கிடைக்கிறது.
மேலும், வீடியோ மோட் (Video Mode), பனோரமா (Panorama Mode) மற்றும் டைம்-லேப்ஸ் போட்டோகிராபி மோட் (Time-lapse Photography Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. 10x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11ஐ ஸ்மார்ட்போன் இருக்கிறது.
8.39 எம்எம் தடிமனுடன் 6500mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 209 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), பாட்டம்-ஃபயரிங் ஸ்பீக்கர் (Button-firing Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஐக்யூ இசட்11ஐ ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது.
IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,225ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,031ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.23,835ஆக இருக்கிறது.
இந்த விலைகள் சீன மார்கெட்டின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மார்கெட்டில் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த ஐக்யூ இசட்11ஐ ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். குளோபல் மார்கெட்டுக்கு வந்தால், இந்திய மார்கெட்டில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications