பேக் டூ பேக் சிக்ஸ் அடிக்கும் iQOO.. 6500mAh பேட்டரி, IP65 ரேட்டிங் உடன் புது 5G போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் அதன் இஸட்11 சீரீஸை பல தரப்பட்ட புதிய மாடல்களை கொண்டு வேற லெவலில் அப்டேட் செய்ய உள்ளது போல் தெரிகிறது. ஐக்யூ இஸட்11 லைட் (iQOO Z11 Lite) முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆன வேகத்தில் தற்போது ஐக்யூ இஸட்11ஐ (iQOO Z11i) குறித்த விவரங்களும் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது.
சீனாவில் ஐக்யூ இஸட்11 சீரீஸின் கீழ் ஐக்யூ இஸட்11எக்ஸ், இஸட்11 (Z11) மற்றும் இஸட்11 டர்போ (Z11 Turbo) ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட இந்தியாவில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) மாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆக இந்திய கஸ்டமர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஐக்யூ ஆர்வலர்கள் ஐக்யூ இஸட்11ஐ மீது ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை!

மாடல் பெயரை வைத்தே இது ஒரு ஆரம்ப நிலை (entry-level) 5ஜி போனாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் ஐக்யூ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதியை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலம் இது முன்பதிவு செய்ய கிடைக்கிறது
ஐக்யூ இஸட்11ஐ அம்சங்கள்: ஐக்யூ இஸட்11ஐ ஸ்மார்ட்போன் ஆனது Green Peak, Desert Gold மற்றும் Ink Shadow ஆகிய மூன்று கலர்களில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது, முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது வாட்டர் டிராப் நாட்ச் (waterdrop notch) கொண்ட 6.72-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை இது Snapdragon 4 Gen 2 சிப் கொண்டு இயங்கலாம்.இது LPDDR4x ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 5MP செல்பீ கேமரா மற்றும் 13MP ரியர் கேமராவை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 15W சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
கடைசியாக ஐக்யூ இஸட்11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் தூசி மற்றும் நீர் தெறிப்பிலிருந்து பாதுகாக்கும் IP65 ரேட்டிங் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் லீக் ஆன ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்: கீக்பென்ச் (Geekbench) மற்றும் இந்தோனேசியாவின் போஸ்டல் (Postel) சான்றிதழ் தரவுத்தளத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து, ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது இப்போது கூகுள் பிளே கன்சோலிலும் (Google Play Console) காணப்பட்டுள்ளது. இந்த தகவல் 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக கிடைத்துள்ளது.
கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அவைகளை வைத்து பார்க்கும் போது - ஐக்யூ தனது முந்தைய மாடலை போலவே, இதை ஒரு பட்ஜெட் விலை 5ஜி போனாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது புதிய ஒன்பிளஸ் என்-சீரிஸ் வரும் முன்னரே - போட்டியாளர் ரெடியாக இருக்கும்!
ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி என்ன விலைக்கு வரக்கூடும்? 2026-ஆம் ஆண்டின் போட்டி நிறைந்த சந்தையில், லாப வரம்பை தக்கவைத்துக்கொண்டு, 5ஜி உதிரிபாகங்களின் உயரும் செலவுகளை சமாளிக்க விலை நிர்ணயத்தில் மாற்றங்கள் தேவைப்படுவதால், ரூ.10,000 க்கும் குறைவாக விற்பனையான ஐக்யூ இஸட்10 லைட் ஸ்மார்ட்போனை போலல்லாமல், ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் வரக்கூடும்.
ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 720 x 1600 ரெசல்யூஷன் டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட்
- 6ஜிபி ரேம்
- குறைந்தது 6,500mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி
- இஸட்10 லைட் மாடலை போலவே, இந்த போனிலும் முன்பக்க கேமராவிற்கான 'யு' நாட்ச் டிசைன்
- தடிமனான கீழ் பகுதி (chin)


Click it and Unblock the Notifications