Home
Mobile

இதுதான் புதிய iQOO 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. IP65 ரேட்டிங்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் அடுத்து ஐக்யூ இஸட்11ஐ 5ஜி (iQOO Z11i 5G) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் நாட்களில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகும். குறிப்பாக சீனாவில் அறிமுகமானதும் இந்த ஐக்யூ இஸட்11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐக்யூ இஸட்11ஐ 5ஜி போனின் படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி எல்இடி பிளாஸ் மற்றும் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) உடன் இந்த போன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் வெளியான ஐக்யூ இஸட்11ஐ 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இதுதான் புதிய iQOO 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ இஸட்11ஐ 5ஜி அம்சங்கள் (iQOO Z11i 5G Specifications): 6.74-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ இஸட்11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600×720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் ஐக்யூ இஸட்11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

13எம்பி ரியர் கேமரா உடன் விவோ ஒய்6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஐக்யூ இஸட்11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ இஸட்11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இதுதான் புதிய iQOO 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), ஃபேஸ் அன்லாக், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், கிராவிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 209 கிராம் ஆகும்.

டெசர்ட் கோல்ட் (Desert Gold), சயான் பீக் (Cyan Peak), இங்க் ஷேடோ (Ink Shadow) ஆகிய மூன்று கலர்களில் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி ஐக்யூ இஸட்11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: Vivo

Best Mobiles in India

English summary
iQOO Z11i 5G images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X