Home
Mobile

முரட்டு ஆளு போல.. 3D டிஸ்பிளே.. MTD 7500 டர்போ.. DUAL கேமரா.. புது iQOO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ஐக்யூ இசட்11 (iQOO Z11) டிசைன், கலர் விவரங்களை தொடர்ந்து சிப்செட் விவரங்களும் இப்போது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனாக இருப்பது தெரிகிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும். இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனானது வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் ஏற்கனவே ஐக்யூ இசட்11 வெளியாகிவிட்டது. ஆனால், இந்திய வெர்ஷனில் டிசைன் அப்படியே வேறாக இருக்கிறது. ஆகவே, பீச்சர்களிலும் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முரட்டு ஆளு போல.. 3D டிஸ்பிளே.. MTD 7500 டர்போ.. DUAL கேமரா!

அதேபோல சிப்செட்டில் மாற்றம் இருக்கிறது. ஏனென்றால், இதில் சீன மார்கெட்டில் வெளியான ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனின் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (Octa Core MediaTek Dimensity 8500) சிப்செட் கிடைத்தது. ஆனால், இந்திய வெர்ஷனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ (MediaTek Dimensity 7500 Turbo) சிப்செட் கிடைக்கிறது.

சொல்லப்போனால், இந்திய மார்கெட்டில் வெளியாகும் முதலாவது டைமன்சிட்டி 7500 டர்போ சிப்செட் கொண்ட மாடலாக ஐக்யூ இசட்11 இருக்கப் போகிறது. 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. அரோரா கிரீன் (Aurora Green) மற்றும் செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

பெரிய பேட்டரியை எதிர்பார்க்கலாம், ஏனென்றால், 3டி கர்வ்ட் டிஸ்பிளேவை கொடுத்தும் 7.99 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. ஆகவே, 7000mAh கேபாசிட்டிக்கும் மேல் எதிர்பார்க்கலாம். 199 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11 இருக்கிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஆகவே, அமேசானில் அடுத்தடுத்து பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப விலை இருக்கும் என்று கூறப்படுகிறது மற்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த நேரத்தில் சீன வேரியண்ட்டின் கிடைத்த பீச்சர்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனென்றால், இதில் கிடைத்த ஒரு சில பீச்சர்கள் இந்திய வெர்ஷனில் இடம்பெற வாய்ப்புள்ளது.

சீன வேரியண்ட்டில் 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலுஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்தது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. மேலும், ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொடுக்கப்பட்டு உள்ளது.

இதே ஓஎஸ் மற்றும் யுஐ இந்திய வெர்ஷனில் கிடைக்க வாய்ப்புள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. இந்திய வெர்ஷனிலும் டூயல் கேமரா செட்டப் கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா கட்டாயம் கிடைக்கும். 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இதையும் இந்திய வெரிஷனில் எதிர்பார்க்கலாம்.

9020mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.25 எம்எம் தடிமன் மற்றும் 216.5 கிராம் எடை கொண்டுள்ளது. இதைவிட இந்திய வெர்ஷன் எடை மற்றும் தடிமனில் குறைவாக இருக்கிறது. ஆகவே, பேட்டரி கேபாசிட்டி கம்மியாக இருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் முழு பீச்சர்கள் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
iQOO Z11 With MediaTek Dimensity 7500 Turbo Processor To Launch in India on August 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X