Home
Mobile

பின்றானே இவன்.. 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. புது iQOO போன்.. எந்த மாடல்?

சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போன் மாடலானது, இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது. ஆனால், சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்களில் மாற்றம் இருக்கும். மற்ற பீச்சர்கள் அப்படியே இருக்க வாய்ப்புள்ளது. என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்?

கடந்த மார்ச் மாதத்தில் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாகியது. ஓரிரு மாதங்களில் குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப வருகிற ஆகஸ்ட் மாத்தில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பீச்சர்களில் மாற்றங்கள் இருக்கின்றன.

பின்றானே இவன்.. 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே!

அதாவது, சீன வெர்ஷனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8500 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெளியாகும் ஐக்யூ இசட்11 வெர்ஷனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ (Octa Core MediaTek Dimensity 7500 Turbo) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது.

அதேபோல பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே டிசைனில் சீன வெர்ஷன் வெளியாகியது. இந்திய வெர்ஷனில் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே இப்போதைக்கு தெரியவந்துள்ளன. மற்ற பீச்சர்கள் சீன வெர்ஷனில் கிடைத்ததை போலவே இருக்குமா என்பது தெரியாது. இருப்பினும், பார்க்கலாம்.

ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9020mAh பேட்டரியுடன் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.25 எம்எம் தடிமன் மற்றும் 216.5 கிராம் எடை கொடுத்துள்ளது. இந்தியாவில் 3டி கர்வ்ட் டிஸ்பிளேவாக கிடைக்க இருப்பதால், பேட்டரியில் மாற்றம் இருக்கலாம்.

அதேபோல தடிமன் மற்றும் எடையிலும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜியை பேக் செய்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதே கேமரா செட்டப்பை இந்திய வெர்ஷனில் கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இசட் சீரிஸ் மாடல்களில் வழக்கமாகவே டூயல் ரியர் கேமரா செட்டப் மட்டுமே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

சீன மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,541 ஆக இருக்கிறது. ஆகவே, இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. எப்படியும் ஆரம்ப விலையை ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதால், ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Z11 With MediaTek Dimensity 7500 Turbo Chipset To Launch Soon India Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X