மிட்-ரேஞ்ச் மிரளுது.. 7050mAh பேட்டரி.. 3D AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. புது iQOO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தில் அரிசோன்டல் கேமரா டிசைனில் வெளியாக இருக்கும் ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போனின் பட்ஜெட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக வெளியாக இருக்கிறது. ஆகவே, பட்ஜெட் பிரியர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் விலை அதிகமாக தோன்றலாம்.
சீன மார்கெட்டில் வெளியான ஐக்யூ இசட்11 மாடலை போலல்லாமல், அப்படியே புதிய டிசைனில் இந்திய வெர்ஷன் வெளியாக இருக்கிறது. சீன வெர்ஷனில் பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைத்தது. ஆனால், இந்திய வெர்ஷனில் அரிசோன்டல் கேமரா டிசைனில் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது.

இந்த டிசைனுடன் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, முக்கிய பீச்சர்கள் அதில் வெளியாகி வருகின்றன. சிப்செட் மற்றும் டிஸ்பிளே விவரங்கள் முன்னதாக வெளியாகின. இப்போது, பட்ஜெட் விவரங்களை ஐக்யூ நிறுவனமே உறுதி செய்துள்ளது.
அதாவது, ரூ.40,000 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இது சீன வெர்ஷனை விட கூடுதல் விலையாக இருக்கிறது. இருப்பினும், இந்தியாவின் முதலாவது மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ (MediaTek Dimensity 7500 Turbo) சிப்செட் கொண்ட மாடலாக வெளியாக இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ சிப்செட்டுடன் ஆண்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. 6.8 இன்ச் அமோலெட் கர்வ்ட் டிஸ்பிளே (AMOLED Curved Display) கிடைக்க இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது.
1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட இருக்கிறது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஐ-கேர் பீச்சர்களுடன் (Eye-care Features) டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஸ்லீப் கம்போர்ட் மோட் (Sleep Comfort Mode), ஐ புரொடெக்சன் மோட் ( Eye Protection Mode) உள்ளது. 2000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இதில் சோனி சென்சார் (SONY Sensor) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கிடைக்கிறது. ஏஐ கேப்சன்கள் (AI Captions), ஏஐ கிரியேஷன் (AI Creation), ஏஐ ரூட்டிங் (AI Routing) மற்றும் சர்கிள் டூ சர்ச் (Circle to Search) போன்ற பீச்சர்கள் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. அரோசா கிரீன் (Aurora Green) மற்றும் செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), 32 எம்பி செல்பீ கேமரா ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மேலும், ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6), IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications