ஒப்போ போன்களை ஓட விட வருது iQOO.. 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
கடந்த மார்ச் மாதம் சீனாவில் ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த போன் வரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Qualcomm's Snapdragon 7s Gen 4 chipset) அல்லது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (octa core MediaTek Dimensity 8500 chipset) இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியும் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன். இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த
போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
9020mAh பேட்டரி கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 ((iQOO Z11) ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 ஏசி, புளூடூத் 5.4 ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் ரூ.31,999 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ போன்களுக்கு போட்டியாக இந்த ஐக்யூ போன் வெளிவர உள்ளது.


Click it and Unblock the Notifications