iQOO அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய ஐக்யூ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (octa core MediaTek Dimensity 8500 chipset) உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி உடன் புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியும் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவுகளுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன். இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

9020mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 ஏசி, புளூடூத் 5.4 ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஐக்யூ இசட்11 விலை
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை 2299 yuan (இந்திய மதிப்பில் ரூ.31,385)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை 2499 yuan (இந்திய மதிப்பில் ரூ.34,115)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,210)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.40,940)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை 3399 yuan (இந்திய மதிப்பில் ரூ.46,400)


Click it and Unblock the Notifications








