தேதி குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 165Hz OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
அதிக பேட்டரி கேபாசிட்டியை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படி ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 9020mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 165Hz ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஐக்யூ இசட்10 (iQOO Z10) ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஐக்யூ இசட் 11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) மார்ச் 11ஆம் தேதி இந்தியாவில் வெளியாகியது. இந்த மாடல்கள் முறையே 7300mAh பேட்டரி மற்றும் 7200mAh பேட்டரி கொண்ட மாடல்களாக வெளியாகின. இப்போது, 9020mAh பேட்டரி கொண்ட மாடலாக ஐக்யூ இசட்11 வெளியாக இருக்கிறது.

ஆனால், சீன மார்கெட்டில் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வருகிற மார்ச் 26ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக உள்ளது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். 9020mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க உள்ளது. ரூ.23,000 பட்ஜெட்டில் இருந்து ரூ.34,000 பட்ஜெட்டில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஐக்யூ இசட் 10 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.21,999ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.23,000 பட்ஜெட்டில் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனின் விலை இருக்க அதிக வாய்ப்புள்ளது. சீனாவில் வெளியாகிய பிறகு அதை தெரிந்து கொள்ளலாம். பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டுள்ளது.
ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற டிஸ்பிளே கிடைக்க இருப்பது தெரிகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (Octa Core MediaTek Dimensity 8500) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வருகிறது.
16 ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொடுக்க உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9020mAh பேட்டரி கொடுக்கப்பட உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரண்ட் சென்சார் எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்களில் பேட்டரி, டிஸ்பிளே மற்றும் டிசைன் பீச்சர்களை மட்டுமே ஐக்யூ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் வெளியான ஐக்யூ இசட்11எக்ஸ் பீச்சர்களை பார்க்கலாம்.
ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போனில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களே ஐக்யூ இசட்11 மாடலில் கிடைக்கும். மார்ச் 12ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஓர்ஜின்ஓஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்கிறது.
2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. ஆகவே, ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனில் இதேபோல டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கும். 32 எம்பி செல்பீ ஷூட்டரை இசட்11எக்ஸ் கொண்டுள்ளது. MIL-STD-810H சர்டிபிகேஷன் மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இதே டியூரபிலிட்டி இசட்11 மாடலிலும் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








