இந்தியாவில் ஐக்யூ இசட்11 அறிமுகம்.. 7050எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. என்ன விலை?
ஐக்யூ நிறுவனம் இந்தியாவில் ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஐபி69 ரேட்டிங், டைமன்சிட்டி சிப்செட், 7050எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது ஐக்யூ இசட்11 போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 specifications): 6.83-இன்ச் 1.5கே 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 × 1260 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஅர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7500 Turbo 4nm) பிராசஸர் உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த போனில் உள்ளது.
50எம்பி Sony IMX882 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற பல வசதிகள் இந்த புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
7050எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஐக்யூ இசட்11 போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, கலிலியோ (Galileo), புளூடூத் 5.4, குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

ஐக்யூ இசட்11 விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை ரூ.44,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
அரோரா கிரீன் மற்றும் செலஸ்டியல் ப்ளூ ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும். வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி அமேசான், ஐக்யூ இணையதளம் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த புதிய ஐக்யூ இசட்11 போன்ற விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications