Home
Mobile

2026 இல் இறங்கி அடித்த iQOO.. 7600mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 7600எம்ஏஎச் பேட்டரி, ஐபி69 ரேட்டிங், 200எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐக்யூ இசட்11 டர்போ அம்சங்கள் (iQOO Z11 Turbo Specifications): 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவுடன் இந்த புதிய ஐக்யூ இசட்11 டர்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டிசி டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

2026 இல் இறங்கி அடித்த iQOO.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன். 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மிட்நைட் பிளாக், ஸ்கை ஒயிட், ஃப்ளோட்டிங் லைட், ஹாலோ பிங்க் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

7600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளுடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

2026 இல் இறங்கி அடித்த iQOO.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆனால் தற்போது ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஐக்யூ இசட்11 டர்போ விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 டர்போ மாடலின் விலை 2699 yuan (இந்திய மதிப்பில் ரூ.34,960)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 டர்போ மாடலின் விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,840)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 டர்போ மாடலின் விலை 3199 yuan (இந்திய மதிப்பில் ரூ.42,735)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 டர்போ மாடலின் விலை 3499 yuan (இந்திய மதிப்பில் ரூ.43,315)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 டர்போ மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.51,790)

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11 Turbo with 7600mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X