ஓரமா ஒத்துது மொத்தமும் .. 200MP கேமரா.. 7600mAh பேட்டரி.. 120W பாஸ்ட் சார்ஜிங்.. புது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் புது மாடலான ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 எம்பி மெயின் கேமரா, 7600mAh பேட்டரி, 120W சார்ஜிங், 16 ஜிபி ரேம் பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஜனவரி 15 ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. குளோபல் மார்கெட்டில் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மாடலாக வெளியாக இருப்பதால், இந்தியாவிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அந்த மாடலின் பீச்சர்கள் மிரளவிடும்படி இருக்கிறது. சீன வெளியீட்டுக்கு பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம்.

ஐக்யூ இசட்11 டர்போ அம்சங்கள் (iQOO Z11 Turbo Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது. 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது.
மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளே கொடுத்துள்ளது. அல்ட்ராசோனி இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) கொண்டுள்ளது. மெட்டல் மிடில் பிரேம் மற்றும் கிளாஸ் பேக் பேனல் பாடியை கொடுத்துள்ளது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் பேக் பேனலில் கொடுத்து உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன. மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களையும் இந்த ஐக்யூ இசட்11 டர்போ கொடுக்க உள்ளது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் கிடைக்க உள்ளது.
200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. மேலும், செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மெயின் கேமராவில் சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்க உள்ளது.
120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7600mAh பேட்டரியை கொடுத்துள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த பெரிய பேட்டரியை கொடுத்தாலும், 7.9 எம்எம் தடிமன் கொண்ட பாடியை கொடுத்துள்ளது. மேலும், 202 கிராம் மட்டுமே எடை வர இருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மட்டுமல்லாமல், கியூ3 சிப் கிடைக்கிறது.
IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனில் கிடைக்க உள்ளது. சீன மார்கெட்டில் 2,500 யுவான் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போனின் குளோபல் வெர்ஷனும் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








