Home
Mobile

200எம்பி கேமரா உடன் களமிறங்கும் புது iQOO போன்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) ஸ்மார்ட்போனை விரைவில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் (Weibo) இந்த போனின் முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது. மேலும் வரும் வாரங்களில் சீனாவில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த புதிய ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

200எம்பி கேமரா உடன் களமிறங்கும் புது iQOO போன்.. எந்த மாடல்?

ஐக்யூ இசட்11 டர்போ அம்சங்கள் (iQOO Z11 Turbo Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 6.59-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும்.

அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த அசத்தலான ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200எம்பி கேமரா உடன் களமிறங்கும் புது iQOO போன்.. எந்த மாடல்?

32எம்பி செல்பி கேமரா மற்றும் 200எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐக்யூ போனில் உள்ளன.

மேலும் 7600mAh பேட்டரியுடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த போனை சார்ஜ் செய்ய 100w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.38,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஐக்யூ இசட்11 டர்போ போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11 Turbo price and specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X