முரட்டு அடி iQOO.. புதிய 5ஜி போன்.. 7.9மிமீ ஸ்லிம் டிசைனில் 7600mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP கேமரா!
ஒன்பிளஸ் அதன் டர்போ 6 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்த வேகத்தில், ஐக்யூ (iQOO) நிறுவனம் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி அன்று ஐக்யூ இஸட்11 டர்போ (iQOO Z11 Turbo) என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்யூ நிறுவனம் ஆனது அதன் ஐக்யூ 11 டர்போ ஸ்மார்ட்போனை - கேமிங் கனெக்டிவிட்டி, பேட்டரி லைஃப் மற்றும் முதன்மை தர உள் அமைப்புகளில் வலுவான முக்கியத்துவம் கொண்ட செயல்திறன் சார்ந்த ஸ்மார்ட்போனாக விளம்பரப்படுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ டீஸர்களின்படி, இந்த ஸ்மார்ட்போனில் குளோபல் எஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சிஸ்டம் 2.0 இடம்பெறும்.

இந்த அமைப்பில் புதிய தண்டர் இஸட்1 கேமிங் சிக்னல் என்ஹான்ஸ்மென்ட் சிப் உள்ளது, இது தீவிர கேமிங் அமர்வுகளின் போது நெட்வொர்க் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் நான்கு சுவர்கள் வழியாக வைஃபை 5GHz சிக்னல்களை பயன்படுத்தும் போது முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது இந்த சிப்கேம் ஷட்டரை 76.47% குறைக்கிறது என்று ஐக்யூ கூறுகிறது.
மேலும் இந்த அமைப்பில் ஏஐ கேமிங் நெட்வொர்க் ஸ்மார்ட் செலக்ஷன் அம்சம் உள்ளது, இது நிகழ்நேர நிலைமைகளின் அடிப்படையில் சிறந்த நெட்வொர்க்கை தானாகவே தேர்ந்தெடுக்கும். இது சாத்தியமான சிக்னல் சிக்கல்களை எதிர்பார்த்து செயல்திறனை முன்கூட்டியே சரிசெய்யும் ஏஐ குறுக்கீடு முன்கணிப்பு மாதிரியையும் கொண்டுள்ளது.
மேம்பட்ட நேவிகேஷன் துல்லியத்திற்காக ஐக்யூ 11 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது ட்யூப்கள் ப்ரெக்வன்சி ஜிபிஎஸ்-ஐ ஆதரிக்கும் என்பதையும் ஐக்யூ உறுதிப்படுத்தி உள்ளது. எந்தவொரு பிடியிலும் சிக்னல் வரவேற்பை உறுதிசெய்ய 24-ஆண்டெனா சரவுண்ட் வடிவமைப்புடன் 5ஜி இணைப்பை இந்த ஸ்மார்ட்போன் உள்ளடக்கும் என்பதையும் கூட ஐக்யூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்யூ 11 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5 கே ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.59 இன்ச் LTPS OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- 16 GB வரை LPDDR5X RAM மற்றும் 1 TB UFS 4.1 ஸ்டோரேஜ்
- அல்ட்ராசோனிக் 3டி பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 200MP ப்ரைமரி கேமரா
- 7,600mAh பேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங்
- 7.9மிமீ தடிமன் மற்றும் சுமார் 202 கிராம் எடை
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
இதுவொரு பக்கம் இருக்க நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே 9,000mAh க்கு அருகிலான பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வெகுஜன உற்பத்திக்கு கொண்டு வந்துள்ளது. இன்னும் சுவாரஸ்யமாக, 10,000mAh பேட்டரி கொண்ட மற்றொரு மாடலும் மதிப்பீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் சரியான வெளியீட்டு காலக்கெடு (லான்ச் டைம்லைன்) மற்றும் மாடல் பெயர்கள் குறித்த எந்த விவரங்களும் இல்லை. தொழில்துறை முழுவதும், குறிப்பாக சீனாவில், பேட்டரி அளவுகள் எவ்வளவு விரைவாக வளர்ந்து வருகின்றன என்பதையும் டிப்ஸ்டர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் பிக் ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைந்தபட்சம் 8,000mAh பேட்டரிகளுடன் தரநிலையாக அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் ஸ்க்ரீன் மாடல்களுக்கு "அடுத்ததாக" உள்ள பிளாக்ஷிப் மாடல்கள் 9000mAh பேட்டரியை நோக்கி நகரக்கூடும், அதே நேரத்தில் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஆனது தற்போதைய பிரீமியம் ஸ்மார்ட்போன்களை விட குறிப்பிடத்தக்க நீண்ட பேட்டரி லைஃப்பை வழங்க இன்னும் அதிகமான பேட்டரி கெப்பாசிட்டிக்கு செல்லக்கூடும்.
முன்னதாக 7300mAh பேட்டரி உடன் இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா
- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications








