மார்க்கெட்டே அதிர போகுது.. 200எம்பி கேமரா.. 7600mAh பேட்டரி.. வருகிறது புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) ஸ்மார்ட்போன அடுத்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும். இந்நிலையில் ஐக்யூ இசட்11 டர்போ முழு விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11 டர்போ அம்சங்கள் (iQOO Z11 Turbo specifications): 6.59-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED)டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும்.
குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த அசத்தலான ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதுவும் இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஐக்யூ இசட்11 டர்போ போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7600mAh பேட்டரியுடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐக்யூ போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.38,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








