மிரண்டுபோன மார்க்கெட்.. 7600mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 OS.. வருகிறது புது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் டீசர் தற்போது Weibo தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே ( Punch-hole display) மற்றும் டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

ஐக்யூ இசட்11 டர்போ அம்சங்கள் (iQOO Z11 Turbo Specifications): 6.59-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த அசத்தலான ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) ஆதரவுகள் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7600mAh பேட்டரியுடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனை சார்ஜ் செய்ய 100w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
200எம்பி ரியர் கேமரா உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐக்யூ போனில் உள்ளன. அதேபோல் ஐக்யூ இசட்11 டர்போ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








