மிரட்டி விட்டாப்ல.. 9000mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. 1.5K டிஸ்பிளே.. புது iQOO போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடல்களாக ஐக்யூ இசட்11 சீரிஸ் (iQOO Z11 Series) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமல்லாமல், சிப்செட், டிஸ்பிளே பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ஐக்யூ இசட்11 சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போனானது, இந்திய மார்கெட்டில் 7300mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதற்கு முன்னதாக சீன மார்கெட்டில் வெளியாகியது. ஆகவே, ஐக்யூ இசட்11 சீரிஸ் முதலில் சீன மார்கெட்டில் வெளியாகும். பிறகே குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும்.

இப்போது, சீன மார்கெட்டில் ஐக்யூ இசட்11 சீரிஸ் மாடல்களின் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே மற்றும் சிப்செட் விவரங்கள் கசிந்துள்ளன. இது ஐக்யூ இசட்10 மாடலைவிட அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்டிருப்பதால், இந்தியாவிலும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது.
இந்த சீரிஸில் ஐக்யூ இசட்11 (iQOO Z11) மற்றும் ஐக்யூ இசட்11எக்ஸ் (iQOO Z11x) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 9000mAh பேட்டரியுடன் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. மற்ற பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11 சீரிஸ் அம்சங்கள் (iQOO Z11 Series Specifications): ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் மிகப்பெரிய பேட்டரி கொண்ட மாடலாகவும் இது இருக்கப் போகிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. ஐக்யூ இசட்11எக்ஸ் மாடலில் 6.76 இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் கொடுத்துள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளதால், ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது. முன்னதாக வெளியான ஐக்யூ இசட்10 மாடலின் பீச்சர்களை பார்க்கலாம்.
ஐக்யூ இசட்10 அம்சங்கள் (iQOO Z10 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு உள்ளது.
6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது.
32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 90W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. ஆகவே, ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனை ரூ.25,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். சீனாவில் இதைவிட மலிவாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








