Home
Mobile

ஆகஸ்ட் 20-ல் களமிறங்கும் புதிய iQOO 5ஜி போன்.. 7050mAh பேட்டரி, சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஐக்யூ இசட்11 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D கர்வ்ட் டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

 ஆகஸ்ட் 20-ல் களமிறங்கும் புதிய iQOO 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி7500 டர்போ (Dimensity 7500 Turbo) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி உடன் புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியும் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவுகளுடன் இந்த புதிய போன் வெளியாகும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 போன்.

ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX882 பிரைமரி கேமரா +8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆகஸ்ட் 20-ல் களமிறங்கும் புதிய iQOO 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை

7050mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 ஏசி, புளூடூத் 5.4 ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.40,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Z11 price and specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X