ஜூலை 24-க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP SONY கேமரா.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் ஐக்யூ இசட்11 லைட் (iQOO Z11 Lite) ஸ்மார்ட்போனில் இப்போது, வரை உறுதி செய்யப்பட்டுள்ள பீச்சர்கள் என்னென்ன? இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மெண்ட் எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம்.
ஐக்யூ நிறுவனத்தின் இசட் சீரிஸ் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலையில் பல பிரீமியம் பீச்சர்களையும் கொடுக்கும். இந்த வரிசையில் டைனாமிக் லைட் (Dynamic Light) கொண்ட மாடலாக ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வருகிற ஜூலை 24 ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஆகவே, ஐக்யூ மற்றும் அமேசான் தளத்தில் முக்கிய பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. இந்த வெளியீட்டுக்கு பிறகு தள்ளுபடி விலைக்கு அமேசான் தளத்திலேயே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரியர் கேமரா செட்டப்பில் டைனாமிக் லைட் வருகிறது.
எல்இடி ஃபிளாஷ் மட்டுமல்லாமல், கூடுதலாக இந்த டைனாமிக் லைட் கிடைக்கிறது. இது மல்டி கலர் எல்இடியாக இருக்கிறது. ஆகவே, நோட்டிபிகேஷன்கள் மற்றும் கால்களின் போது க்ளோவாகும்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொடுத்துள்ளது. 2 கலர்களில் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சோலார் ஃபிளேம் (Solar Flame) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனில் இந்த ஐக்யூ இசட்11 லைட் வெளியாக இருக்கிறது. டிசைனில் இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. இப்போது, பீச்சர்களை பார்த்துவிட்டு, எதிர்பார்க்கப்படும் பட்ஜெட்டை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): ஏஐ கிரியேஷன் (AI Creation), ஏஐ கேப்சன்ஸ் (AI Captions) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சிங்கிள் சார்ஜில் 20 மணி நேரங்களுக்கு சோஷியல் மீடியா ஸ்க்ரோலிங் கொடுக்கும்.
80 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளேபேக் கொடுக்கும். 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைப்பதால் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 8 மணி நேரங்களுக்கு கால் பேக் கிடைக்கும். 7.2 மணி நேரங்களுக்கு ஆன்லைன் வீடியோ பிளேபேக் கொடுக்கும். 5 வருடத்துக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது. இதற்கு பிறகும் 80 சதவீத ஹெல்த் சீராக இருக்கும்.
மேலும், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging), ரிவர்ஸ் சார்ஜிங் 2.0 (Reverse Charging 2.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆகவே, இதற்கான சர்டிபிகேஷன் கொண்டிருக்கும். சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கேமராவுக்க ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) கிடைக்கிறது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க கொண்ட டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 கிடைக்க இருக்கிறது. 2 ஜென் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் வருகிறது. ரூ.15,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications