Home
Mobile

அதுக்குள்ள ரூ.9999 க்கு இன்னொரு புது 5G போன்-ஆ? OnePlus-ஐ துரத்தி துரத்தி வேட்டை ஆடும் iQOO பிராண்ட்!

சைனீஸ் மார்க்கெட்டில் மட்டுமல்ல, இந்திய சந்தையிலும் கூட ஐக்யூ (iQOO) பிராண்ட் ஆனது ஒன்பிளஸ் (OnePlus) பிராண்டின் முக்கிய போட்டியாளராக திகழ்கிறது. நீ பிரீமியம் போன் விட்டா.. நானும் பிரீமியம் போன் இறக்குவேன்.. நீ மிட்-ரேன்ஜ் மாடலை விட்டா.. நானும் மிட்-ரேன்ஜ் போனை அறிமுகம் செய்வேன் என்று.. இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது.

இப்படியாக சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி க்கு போட்டியாக ஐக்யூ 15டி மாடலையும், வரவிருக்கும் ஒன்பிளஸ் 16 மாடலுக்கு போட்டியாக ஐக்யூ 16 மாடலையும், இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக.. வருகிற ஜூன் 15 ஆம் தேதி அன்று ஐக்யூ இஸட்11 இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்றும், இதன் விலை ரூ. 30,000-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுக்குள்ள ரூ.9999 க்கு இன்னொரு புது 5G போன்-ஆ?

இதற்கிடையில் அதே ஐக்யூ இசட்11 சீரிஸின் கீழ் இன்னும் மலிவான விலைக்கு ஐக்யூ இஸட்11எக்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது இது ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரிஸின் கீழ் உள்ள சிஇ 6, சிஇ 6 லைட் ஆகிய மாடல்களின் விற்பனையை துவம்சம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ இஸட்11 எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கீக்பென்ச் (Geekbench) பட்டியலில் காணப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பெரிய அளவிலான முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இது சிங்கிள்-கோர் சோதனையில் 549 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 1,776 புள்ளிகளையும் பெற்றுள்ளதை வெளிப்படுத்துகிறது

இது பிளாக்ஷிப் லெவல் நம்பர்ஸ் அல்ல மற்றும் இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை, ஏனெனில் இஸட் லைட் சீரீஸ் பொதுவாக பட்ஜெட் மற்றும் லோவர் மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவை இலக்காக கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஆக்டா-கோர் சிப் மூலம் இயக்கப்படுகிறது என்பதையும் பெஞ்ச்மார்க் பட்டியல் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் இது மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் ஆக இருக்கலாம்.

சுவாரஸ்யமாக, இதன் முந்தைய மாடலான ஐக்யூ இஸட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) மாடலும் கூட இதே சிப்செட்டை தான் பயன்படுத்துகிறது. இந்த பட்டியலில் காட்டப்பட்டுள்ள மற்றொரு விவரம் 8ஜிபி ரேம் ஆகும், மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ல் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, இதே மாடல் ப்ளூடூத் எஸ்ஐஜி தரவுத்தளத்திலும் காணப்பட்டது, அதன் மூலம் இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு பெறலாம் என்பது தெரிய வந்தது. எப்படியும் இது 7000-8000mAh க்கு இடையிலான பேட்டரியை பேக் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஐக்யூ இஸட்11 5ஜி மாடல் ஆனது 9,020mAh பேட்டரியை கொண்டுள்ளது.

விலையை பொறுத்தவரை, முன்னதாக வெளியான ஐக்யூ இஸட்10 லைட் (iQOO Z10 Lite) ஆனது ரூ.9,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, எனவே இதன் அடுத்த மாடலும் ஏறக்குறைய இதே விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, இரண்டுமே ஒரே சிப்செட்டை பகிர்ந்துகொள்வதால் இந்த விலை உறுதியாகிறது. எங்களுக்கு வேறு ஏதேனும் புதிய தகவல்கள் கிடைத்தால், அதை உடனுக்குடன் பாட்டே செய்கிறோம்.

ஐக்யூ 16, ஒன்பிளஸ் 16 எப்போது அறிமுகம் ஆகும் ? ஐக்யூ நிறுவனம் வருகிற அக்டோபர் மாதம், ஐக்யூ 16 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே அக்டோபர் மாதத்தில் தான் ஒன்பிளஸ் 16 மாடலும் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Article Corrections

Slight Spelling mistake in the Title, Changed it.
Best Mobiles in India

English summary
iQOO Z11 lite with MediaTek Dimensity 6300 Chipset 8GB RAM Launching Soon Price Around Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X