அடிச்சான் பாரு iQOO.. 6500mAh பேட்டரி, 44W சார்ஜிங், AI Creation உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ஐக்யூ இஸட்11 லைட் (iQOO Z11 Lite) மாடலின் இந்திய அறிமுகம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஜூலை 24 ஆம் தேதி அன்று அறிமுகமாகும் என்று ஐக்யூ அறிவித்துள்ளது
வெளியிட்டு தேதியுடன் சேர்த்து, ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது, சக்திவாய்ந்த ஏஐ அம்சங்களுடன் மாணவர்கள் புத்திசாலித்தனமாக படிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள ஏஐ கிரியேஷன் அம்சம் ஆனது உடனடி டாக்குமெண்ட் சம்மரீஸ், அசைன்மென்ட் ரீபைன்மென்ட், கன்டென்ட் ஜெனரேஷன், டிரான்ஸ்லேஷன் , ப்ரெயின் ஸ்டார்மிங் மற்றும் ரைட்டிங் அசிஸ்டென்ட்ஸ் ஆகியவற்றை வழங்கும் என்று ஐக்யூ கூறியுள்ளது.

இதேபோல ஏஐ கேப்ஷன்ஸ் அம்சம் ஆனது, நிகழ்நேர ஒலிபெயர்ப்பு, நேரலை மொழிபெயர்ப்பு மற்றும் ஒரே டேப்பில் (கிளிக்கில்) விரிவுரை சுருக்கங்களை (lecture summaries) வழங்குகிறது. இது முக்கியமான கற்றல்களை எளிதாக பதிவு செய்யவும், மீண்டும் பார்க்கவும் உதவும் என்று ஐக்யூ நிறுவனம் கூறுகிறது
இந்த பயனுள்ள ஏஐ அம்சங்களுடன் சேர்த்து ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் கூட ஐக்யூ உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி இது மிகப்பெரிய 6500mAh பேட்டரி, 44W ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் 5 வருட பேட்டரி ஹெல்த் ஆகியவற்றுடன் வரும். அதாவது ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது நாள் முழுவதும் மாணவர்களுக்கு துணையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஐக்யூ இஸட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகி இருந்தாலும், இப்போது அதன் ஆரம்ப விலை ரூ.20,000 க்கு அருகில் இருக்கிறது (பிளிப்கார்ட்டில் ரூ.18,330 க்கு வாங்க கிடைக்கிறது) ஆக, ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வர வாய்ப்பில்லை. மாறாக ரூ. 18,000 - ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாகலாம்.
ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) மற்றும் 1,000 நிட்ஸ் (nits) வரையிலான ஹை ப்ரைட்னஸ் (HBM) கொண்ட பெரிய 6.74-இன்ச் HD+ டிஸ்பிளே
- தூசி மற்றும் நீர் புகாத IP64 தரச்சான்றிதழ்
- SGS-இன் பைவ் ஸ்டார் ஆன்ட்டி-ஃபால் சான்றிதழ்
- ராணுவத் தரத்திலான MIL-STD-810H சான்றிதழ்
- 6nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட MediaTek Dimensity 6300 சிப்செட்
- 8GB வரையிலான ரேம் (RAM) மற்றும் கூடுதலாக 8GB வரையிலான 'விர்ச்சுவல் ரேம்' (virtual RAM) வசதி
- 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- USB Type-C போர்ட், Wi-Fi 5 மற்றும் Bluetooth 5.4 ஆதரவு
- பக்கவாட்டில் அமைக்கப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 6,000mAh பேட்டரி
- ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 மணிநேரம் வரை இசை கேட்பதற்கும், 37 மணிநேரம் வரை பேசவும் முடியும் என்று ஐக்யூ நிறுவனம் கூறுகிறது
- 15W சார்ஜிங் வசதி
- 1,600 முறை சார்ஜ் செய்த பிறகும் பேட்டரி அதன் திறனில் 80 சதவீதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று ஐக்யூ உறுதியளிக்கிறது.
- டூயல் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் Sony AI சென்சார் ப்ரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் 'போக்கே' (bokeh) சென்சார்
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தேவையற்ற பொருட்களை நீக்குவதற்கான 'AI Erase', தெளிவான படங்களை எடுப்பதற்கான 'AI Photo Enhance' மற்றும் ஆவணங்களை எளிதாக ஸ்கேன் செய்து பகிர உதவும் 'AI Document Mode' உள்ளிட்ட பல ஏஐ அடிப்படையிலான அம்சங்கள்


Click it and Unblock the Notifications