iQOO போட்டான் பாரு.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் புதிய மாடலாக ஐக்யூ இசட்11 லைட் (iQOO Z11 Lite) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலையில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
ஐக்யூ இசட் சீரிஸ் மாடல்கள் பட்ஜெட்டில் பெரிய பேட்டரி மற்றும் பக்காவான சென்சார் கொண்ட கேமராவுடன் களமிறங்குவதால் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போனிலும் பெரிய பேட்டரி மற்றும் சோனி சென்சார், கேலக்ஸிகோர் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஐக்யூ இசட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஓர்ஜின்ஓஎஸ் 6 (Origin OS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 6.74 இன்ச் (1600 x 720 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்82 (Sony IMX852) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. கேலக்ஸி கோர் ஜிசி6163பி (GC6163B) சென்சாருடன் 0.08 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.
44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் மற்றும் 209 கிராம் எடையை கொடுத்து இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP65 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது.
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொடுத்துள்ளது. ஓர்ஜின் ஓஎஸ் கிடைப்பதால், ஏஐ கிரியேஷன் (AI Creation) மற்றும் ஏஐ கேப்சன் (AI Captions) கொடுக்கப்பட்டு உள்ளது. 5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கிடைக்கிறது. அதன்பிறகு 80 சதவீத ஹெல்த் கிடைக்கும்.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,499ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,499ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.1500 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ரூ.17,999 விலைக்கு இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சோலார் ஃபிளேம் (Solar Flame) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஜூலை 30ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. அமேசான் மற்றும் ஐக்யூ தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications