Home
Mobile

பொளந்து கட்டும் அமேசான்.. 50 சதவீத ஆஃபரில் iQOO 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. இதில் 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா கொண்ட ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் பாதிக்குப்பாதி விலையில் கிடைக்கிறது.

இப்போது, அமேசான் விற்பனையில் 50 சதவீத தள்ளுபடி விலைக்கு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.15,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.464 கேஷ்பேக் மற்றும் 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

பொளந்து கட்டும் அமேசான்.. 50 சதவீத ஆஃபரில் iQOO 5ஜி போன்.. மாடல்?

ஐக்யூ இசட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 6என்எம் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 (Arm Mali G57 MC2) ஜிபியு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், ஓர்ஜின்ஓஎஸ் மூலம் ஏஐ கிரியேஷன் (AI Creation), ஏஐ கேப்ஷன்ஸ் (AI Captions) உள்ளிட்ட பீச்சர்களையும் பயன்படுத்த முடியும். டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, இந்த ஐக்யூ இசட்11 லைட் போனில் 6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.

இது 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் (HD+) ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும், 1200 நிட்ஸ் எச்பிஎம் (HBM) பிரைட்னஸ் கிடைக்கிறது. கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த போனின் பின்புறத்தில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கொண்ட 50எம்பி மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் கேலக்ஸி கோர் ஜிசி6163பி (GalaxyCore GC6163B) சென்சாரும் இடம்பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் பயன்பாடுகளுக்காக 5எம்பி ப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புரொடெக்சனுக்காக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் உள்ளது. பேட்டரி அம்சங்களில் இந்த ஸ்மார்ட்போன் கவனம் செலுத்துகிறது.

இதில் 6500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை விரைவாக சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பேட்டரியின் நீண்டகால பயன்பாட்டை கருத்தில் கொண்டு, 5 ஆண்டுகளுக்குப் பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரை, இந்த போன் 8.39 மிமீ தடிமனையும் 209 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

வயர்டு ஹெட்போன்களை பயன்படுத்துவதற்காக 3.5 மிமீ ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ்களில் இருந்து புரொடெக்சன் கொடுக்க IP65 ரேட்டிங்கும் இதில் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியைக் குறிக்கும் MIL-STD-810H சர்டிபிகேஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Z11 Lite With 4GB RAM Gets Discount on Amazon Great Indian Festival 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X