Home
Mobile

விட்ராதீங்க சார்.. ரூ.17999 பட்ஜெட்ல SONY கேமரா.. 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஐக்யூ இசட்11 லைட் (iQOO Z11 Lite) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தள்ளுபடி போக தொடங்கி இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் சோனி சென்சார் கேமரா, 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முதலில் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,499ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,499ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

விட்ராதீங்க சார்.. ரூ.17999 பட்ஜெட்ல SONY கேமரா.. 6500mAh பேட்டரி!

ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.19,999 விலைக்கும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.22,999 விலைக்கும் வாங்கி கொள்ளலாம். மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சோலார் ஃபிளேம் (Solar Flame) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஐக்யூ இசட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (Origin OS 6) கிடைக்கிறது.

2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. ஆனால், செக்யூரிட்டி அப்டேட்கள் 4 வருடங்களுக்கு வருகின்றன. ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் பேக் செய்யப்பட்டு இருக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்82 (Sony IMX852) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸி கோர் ஜிசி6163பி (GC6163B) சென்சார் கொண்ட 0.08 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி ஃப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்களும் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன.

5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டியுடன் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 8.39 எம்எம் தடிமனில் கிடைக்கிறது. மேலும், 209 கிராம் எடையை கொடுத்துள்ளது. IP65 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்ட மாடலாக இருக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS) கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Z11 Lite With 4GB RAM Available At Rs 1500 Discount on Amazon Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X