Home
Mobile

இதுக்கு தான் வெயிட்டிங்.. நாளை அறிமுகமாகும் புது iQOO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ (iQOO) நிறுவனம் நாளை (ஜூலை 24) புதிய ஐக்யூ இஸட்11 லைட் (iQOO Z11 Lite) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதன்பின்பு அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் கசிந்த ஐக்யூ இஸட்11 லைட் போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ இஸட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): சக்திவாய்ந்த மீயாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இதுக்கு தான் வெயிட்டிங்.. நாளை அறிமுகமாகும் புது iQOO 5ஜி போன்..

அதேபோல் 6.7-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய ஐக்யூ இஸட்11 லைட் போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதுவும் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

50எம்பி சோனி ரியர் கேமரா உடன் ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐக்யூ போனில் இருக்கும்.

குறிப்பாக 6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது. அதேபோல் மேம்பட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த புதிய ஐக்யூ போனில் உள்ளன.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ஐக்யூ இஸட்11 லைட் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இருக்கும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இதுக்கு தான் வெயிட்டிங்.. நாளை அறிமுகமாகும் புது iQOO 5ஜி போன்..

6500mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரூ.20,000-க்கு கீழ் இந்த புதிய ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Z11 Lite will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X