iQOO ஒரே போடு.. ரூ.15,999 பட்ஜெட்ல SONY கேமரா.. 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. புது வேரியண்ட்.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் பக்கா பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியாகி விற்பனையில் பட்டையை கிளப்பிய ஐக்யூ இசட்11 லைட் 5ஜி (iQOO Z11 Lite 5G) ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது.
இந்திய மார்கெட்டில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. ஆரம்ப விலையே ரூ.19,999ஆக இருந்ததால், ரூ.15,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு விலை அதிகமாக தெரிந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை ஐக்யூ நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் விற்பனைக்கும் கிடைக்கிறது. ரூ.17,499ஆக விலை இருக்கிறது. ஆனால், அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் மலிவாக கிடைக்க இருக்கிறது.
அதாவது, பேங்க் டிஸ்கவுண்ட் ரூ.15,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.15,000 செக்மெண்ட்டில் வாங்கி கொள்ளலாம். முன்னதாக வெளியான 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,499ஆகவும் இருக்கிறது.
மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,499ஆகவும் இருக்கிறது. இந்த விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட விலையாக இருக்கிறது. ரூ.2,000 வரையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரேம் மற்றும் மெமரி அப்கிரேடை தவிர பீச்சர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகவே, அதை இப்போது பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஐக்யூ மாடல்களுக்கு கிடைக்கும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (Origin OS 6) கிடைக்கிறது. இதில் ஏஐ கிரியேஷன் (AI Creation) மற்றும் ஏஐ கேப்சன் (AI Captions) உள்ளிட்ட ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன.
எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்82 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை இந்த ஐக்யூ இசட்11 லைட் கொடுக்கிறது.
கேலக்ஸி கோர் ஜிசி6163பி (GC6163B) சென்சாருடன் 0.08 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி மற்றும் 8.39 எம்எம் தடிமன் உள்ளது. மொத்தமாக 209 கிராம் எடை கிடைக்கிறது. IP65 ரேட்டிங் மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
