Home
Mobile

OnePlus ஒப்பாரி.. பட்டைய கிளப்பும் பட்ஜெட்டில் புது iQOO 5G போன்.. 6GB ரேம், 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்நேரத்திற்கு.. "நீ இங்கயும் வந்துட்டீயா?" என்று ஐக்யூ நிறுவனத்தை பார்த்து ஒன்பிளஸ் நிறுவனம் குமுறிக் கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.20000 க்கும் குறைவான பட்ஜெட் பிரிவில் புதிய என்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியான வேகத்தில், ஐக்யூ-வும் அதன் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை இறக்கி உள்ளது,

அது ஐக்யூ இஸட்11 லைட் (iQOO Z11 Lite 5G) ஸ்மார்ட்போனாகும். கீக்பென்ச் (Geekbench) மற்றும் இந்தோனேசியாவின் போஸ்டல் (Postel) சான்றிதழ் தரவுத்தளத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து, ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது இப்போது கூகுள் பிளே கன்சோலிலும் (Google Play Console) காணப்பட்டுள்ளது. இந்த தகவல் 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக கிடைத்துள்ளது.

OnePlus ஒப்பாரி.. பட்டைய கிளப்பும் பட்ஜெட்டில் புது iQOO 5G போன்!

கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அவைகளை வைத்து பார்க்கும் போது - ஐக்யூ தனது முந்தைய மாடலை போலவே, இதை ஒரு பட்ஜெட் விலை 5ஜி போனாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது புதிய ஒன்பிளஸ் என்-சீரிஸ் வரும் முன்னரே - போட்டியாளர் ரெடியாக இருக்கும்!

ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி என்ன விலைக்கு வரக்கூடும்? 2026-ஆம் ஆண்டின் போட்டி நிறைந்த சந்தையில், லாப வரம்பை தக்கவைத்துக்கொண்டு, 5ஜி உதிரிபாகங்களின் உயரும் செலவுகளை சமாளிக்க விலை நிர்ணயத்தில் மாற்றங்கள் தேவைப்படுவதால், ரூ.10,000 க்கும் குறைவாக விற்பனையான ஐக்யூ இஸட்10 லைட் ஸ்மார்ட்போனை போலல்லாமல், ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் வரக்கூடும்.

ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 720 x 1600 ரெசல்யூஷன் டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட்
- 6ஜிபி ரேம்
- குறைந்தது 6,500mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி
- இஸட்10 லைட் மாடலை போலவே, இந்த போனிலும் முன்பக்க கேமராவிற்கான 'யு' நாட்ச் டிசைன்
- தடிமனான கீழ் பகுதி (chin)

ஒன்பிளஸ் என்-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்: டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) வழியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்மார்ட்ப்ரைஸ் (SmartPrix) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் என் சீரிஸ் என்பது பல்வேறு நிலைகளை (Tiers) இலக்காக கொண்ட பல ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஒரு புதிய பட்ஜெட் சீரீஸ் ஆக இருக்கும்.

அதாவது நாம், என் சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து பல வகையான மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு இந்த சீரீஸின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்கள் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் இருக்கும் என்றும் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, இந்த சீரீஸின் கீழ் வரும் அனைத்து போன்களும் பட்ஜெட் பிரிவை சார்ந்ததாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஒன்பிளஸ் என்-சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் புதிய என் சீரிஸை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட் விலை ஒன்பிளஸ் போன்களுக்காக நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் சில வாரங்களில் அறிமுகம் நடக்கலாம். விரைவில் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் ஏற்கனவே நார்ட் (Nord) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கொண்டிருப்பதால், இந்த புதிய சீரிஸின் பெயர் அல்லது பிராண்டிங்கின் கீழ் என்னெண்ணன் கிடைக்கும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். ஏற்கனவே ரூ.20,000-க்கு குறைவான விலைப்பிரிவு கடும் போட்டி நிறைந்ததாக உள்ளது; இதில் ஷாவ்மீ (Xiaomi), லாவா (Lava) மற்றும் ஐக்யூ (iQOO) போன்ற நிறுவனங்களின் பெஸ்ட் போன்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளன. எனவே, ஒன்பிளஸ் இந்த பிரிவிலும் வாடிக்கையாளர்களுக்கு, பணத்திற்கு ஏற்ற சிறந்த மதிப்பை (value for money) வழங்க வேண்டியிருக்கும்.

Best Mobiles in India

English summary
iQOO Z11 Lite 5G Specifications Leaked Just After OnePlus New N Series Launch Hinted
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X