Home
Mobile

அறிமுகமானது புதிய வேரியண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 5G! எந்த போன்?

ஐக்யூ இசட்11 லைட்(iQOO Z11 Lite) ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளியானது. இந்நிலையில் ஐக்யூ இசட்11 லைட் ஸ்மர்ட்போனின் புதிய வேரியண்ட் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஐக்யூ இசட்11 லைட் போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் விலை ரூ.17,999-ஆக உள்ளது. ஆனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையில் இந்த புதிய வேரியண்ட் ரூ.15,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அறிமுகமானது புதிய வேரியண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி..

அதேபோல் கடந்த ஜூலை மாதம் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 லைட் மாடல் ரூ.19,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.21,499 விலையிலும், 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐக்யூ இசட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு(Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் ஐக்யூ இசட்11 லைட் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது.

6.74 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி(LCD) டிஸ்பிளேவுடன் இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் வெளியானது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 1600 x 720 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் உள்ளட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 பிரைமரி கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் உடன் ஐக்யூ இசட்11 லைட் போன் வெளியாகி உள்ளது. ஏஐ கிரியேஷன் (AI Creation), ஏஐ கேப்சன் (AI Captions) போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500எம்எஏச் பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் ஐக்யூ இசட்11 லைட் போனில் உள்ளன. அதேபோல் IP65 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சோலார் ஃபிளேம் (Solar Flame) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
iQOO Z11 Lite 5G New 4GB RAM and 64GB variant launched in India: check Price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X