அப்படி போடு iQOO.. ரூ.15000 க்கு 7000mAh பேட்டரி, 44W சார்ஜிங், 8GB ரேம் உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ (iQOO) நிறுவனம், இந்திய சந்தையில் ஒரு புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை (Budget Segment 5G Phone) அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி (iQOO Z11 Lite 5G) மாடல் ஆகும்.
ஐக்யூ இந்தியாவின் தலைவர் நிபுன் மௌர்யா, வரவிருக்கும் இந்த இஸட்-சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீஸரை பகிர்ந்து உள்ளார். அது ஐக்யூ இஸட்11 லைட் என்று அழைக்கப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில், எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் உள்ள டீஸரில் ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் ரியர் டிசைனை பார்க்க முடிகிறது.

ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும்? டீஸர் படத்தின் வழியாக, ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் செங்குத்தான கேமரா செட்டப் மற்றும் அதை சுற்றியுள்ள வட்ட வடிவ எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. மேலும் இது விரைவில் அறிமுகமாகும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுதவிர்த்து இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்த எந்த விவரங்களை ஐக்யூ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் இது அமேசான் (Amazon) மூலம் விற்பனை செய்யப்படும் என்பது உறுதியாகியுள்ளது; அனைத்து ஐக்யூ போன்களும் இந்தத் தளத்தின் மூலமே விற்கப்படுவதால் இது ஆச்சரியத்திற்குரியதல்ல.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சமீபத்தில், கீக்பென்ச் (Geekbench) பெஞ்ச்மார்க்கிங் தளத்தின் தரவுத்தளத்தில், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இரண்டு ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றன. அதில் I2510 மற்றும் I2514 ஆகிய மாடல் எண்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஐக்யூ இஸட்11 லைட் மற்றும் ஐக்யூ இஸட்11 ஆகிய பெயர்களில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் கீக்பென்ச் லிஸ்டிங்கின் படி, இது டிமென்சிட்டி 6300-சீரிஸ் சிப்செட் உடன் வரலாம். மேலும் இதில் 8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆர்ஜின்ஓஎஸ் 6 இடம்பெறலாம். இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது 6500mAh முதல் 7,000mAh வரையிலான பேட்டரியை பேக் செய்யலாம்.
ஐக்யூ இஸட் 11 லாய் 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரலாம்? இது ரூ.18,999 க்கு அறிமுகமான ஐக்யூ இஸட்11எக்ஸ் ஸ்மார்ட்போனை விட விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த லைட் வேரியண்டின் அடிப்படை மாடல் சுமார் ரூ.15,000 பட்ஜெட்டில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே இருக்கும் ஸ்மார்ட்போன்களின் மத்தியில் ரூ.15000 பட்ஜெட்டில் வரும் 5ஜி ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற வாய்ப்புள்ளது. நினைவூட்டும் வண்ணம் மிகவும் சமீபத்தில் தான் 3 ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிகரித்தன.
ஐக்யூ 15 பழைய விலை VS புதிய விலை:
ஐக்யூ 15 (12GB + 256GB) - ரூ.72,999 இல் இருந்து ரூ.74,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15 (12GB + 512GB) - ரூ.79,999 இல் இருந்து ரூ.81,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15ஆர் பழைய விலை VS புதிய விலை:
ஐக்யூ 15ஆர் (8GB + 128GB) - ரூ.46,999 இல் இருந்து ரூ.47,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15ஆர் (12GB + 256GB) - ரூ.50,999 இல் இருந்து ரூ.52,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15ஆர் (12GB + 512GB) - ரூ.57,999 இல் இருந்து ரூ.59,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ நியோ 10 பழைய விலை VS புதிய விலை:
ஐக்யூ 15 (8GB + 256GB) - ரூ.35,999 இல் இருந்து ரூ.37,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15 (12GB + 256GB) - ரூ.40,999 இல் இருந்து ரூ.42,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது


Click it and Unblock the Notifications