இனி எங்கும் iQOO தான்.. ரூ.15000 பட்ஜெட்ல புது 5ஜி போன்.. 6500mAh பேட்டரி, Dynamic Light, IP65.. எந்த மாடல்?
ஐக்யூ இஸட்11 லைட் (iQOO Z11 Lite) ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 24 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஐக்யூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே இது இஸட்11 சீரீஸின் கீழ் வரும் புதிய வரவாக இருக்கும்.
அறிமுகத்திற்கு முன்னதாகவே அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் நேரலையில் உள்ள மைக்ரோசைட் (microsite) மூலம், ஐக்யூ நிறுவனம் அதன் ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள், ப்ராசஸர் (processor) மற்றும் ஏஐ (AI) சார்ந்த பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 'மிட்நைட் ப்ளூ' (Midnight Blue) மற்றும் 'சோலார் ஃபிளேம்' (Solar Flame) ஆகிய 2 கலர்களில் அறிமுகமாகும். இது மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் இயங்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட்டின் AnTuTu ஸ்கோர் 5,79,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று ஐக்யூ கூறுகிறது.
மலிவு விலை முதல் நடுத்தர விலை வரையிலான பல 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள இந்த சிப்செட், சோஷியல் மீடியா பயன்பாடு, ஸ்ட்ரீமிங், மல்டி டாஸ்கிங் (multitasking) மற்றும் சாதாரண கேமிங் போன்ற அன்றாட செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் ஒன்று 'டைனமிக் லைட்' (Dynamic Light) ஆகும். இது பேக் பேனலில் உள்ள மல்டி கலர் எல்இடி ரிங் ஆகும். இது போன் கால்கள் மற்றும் நோடிபிக்கேஷன்களின் போது ஒளிரும். சில ஆண்டுகளுக்கு முன்பு நத்திங் (Nothing) நிறுவனம் பேக் பேனலில் லைட்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, இத்தகைய அம்சங்கள் மலிவு மற்றும் நடுத்தர விலை ஸ்மார்ட்போன் பிரிவுகளில் பிரபலமடைந்து வருகின்றன.
இந்த ஸ்மார்ட்போனின் ஏஐ அம்சங்களை பொறுத்தவரை, யூட்யூப் வீடியோக்களுக்கான தலைப்புகளை (captions) உருவாக்கும் 'AI Captions' மற்றும் உரையை சுருக்கமாகத் தொகுக்கும் 'AI Creation' போன்றவைகளை கொண்டிருக்கும். இந்த அம்சங்கள், இத்தகைய விலைப்பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களில் படிப்படியாக பொதுவானதாகி வரும் சாஃப்ட்வேர் திறன்களை வழங்குகின்றன.
வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- UFS 2.2 ஸ்டோரேஜ் வசதி
- 6,500mAh பேட்டரி
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50MP ப்ரைமரி கேமரா
- 1200 நிட்ஸ் (nits) வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 6.74-இன்ச் HD+ LCD டிஸ்பிளே
- IP65 ரேட்டிங்
என்ன விலைக்கு வரலாம்? ஐக்யூ இஸட்11 லைட் மாடலானது இஸட்11 சீரீஸிலேயே மிகவும் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது ரூ.22,999-க்கு விற்கப்படும் ஐக்யூ இசட்11எக்ஸ் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்படலாம். ரூ.15,000 பட்ஜெட்டில் வாந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனும் வருகிறது: ஐக்யூ இஸட்11 லைட் வெளியான வேகத்தில் ஐக்யூ இஸட்11 5ஜி (iQOO Z11 5G) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது பிஐஎஸ் தளத்தில் காணப்பட்டுள்ளது. ஆக இதுவும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.
ஐக்யூ இஸட்11 5ஜி - என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரலாம்? டிப்ஸ்டர் டெபயன் ராயின் (Debayan Roy) கூற்றுப்படி, ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது UFS 3.1 ஸ்டோரேஜ் வசதி, பிளாட் ஆன OLED டிஸ்பிளே மற்றும் 8,000mAh முதல் 9,000mAh வரையிலான திறன் கொண்ட பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 7500 சிப்செட், 12GB RAM மற்றும் Android 16 ஓஎஸ் ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.25,000 விலை வரம்பில் உள்ள பெரும்பாலான பிரபலமான போன்களும் இதே போன்ற திறன் கொண்ட சிப்செட்டுகள் மற்றும் பேட்டரி அளவுகளை கொண்டிருப்பதால், ஐக்யூ இஸட்11 5ஜி மாடலும் கூட ரூ.25,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.
ரூ.25,000 க்கு கீழே வர வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சமீபத்திய விலை மாற்றங்களுக்கு பிறகு ஐக்யூ இஸட்11எக்ஸ் (iQOO Z11x) மாடல் ஆனது ரூ.22,999 க்கு விற்கப்படுகிறது. ஐக்யூ இஸட்11 ஆனது ஐக்யூ இஸட்11எக்ஸ் மாடலை விட ஹை-எண்ட் மாடலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ரூ.25,000 க்கும் குறைவான விலகி வர வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications