மார்க்கெட்டே மிரள போகுது.. 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. வருகிறது புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 26-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த ஐக்யூ இசட்11 முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.
ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (octa core MediaTek Dimensity 8500 chipset) உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி உடக் புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற பல்வேறு சிறப்பான வசதிகள் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
9,020mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளிவரும். என்று கூறப்படுகிறது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








