Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 9020mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வருகிறது ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஐக்யூ இசட்11 போன் வரும் ஜூன் 15 அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது. இப்போது ஐக்யூ இசட்11 போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி ( Qualcomm's Snapdragon 7s Gen 4 SoC) உடன் ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

கொஞ்சம் பொறுங்க.. இந்தியாவுக்கு வருகிறது ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி உடன் புதிய ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியும் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவுகளுடன் இந்த புதிய போன் வெளியாகும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன். இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

கொஞ்சம் பொறுங்க.. இந்தியாவுக்கு வருகிறது ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

9020mAh பேட்டரியை கொண்டுள்ளது ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 ஏசி, புளூடூத் 5.4 ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக ஐக்யூ இசட்11 போன் இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQOO Z11 India launch Timeline and specifications, Price leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X