Home
Mobile

9020mAh பேட்டரி, 90W சார்ஜிங், 12GB ரேம், IP69.. கலக்கல் காம்பினேஷனில் புது iQOO 5ஜி போன்..எந்த மாடல்?

ஐக்யூ (iQOO) நிறுவனமானது முரட்டு அம்சங்களை காம்பினேஷன்களாக கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஐக்யூ இஸட்11 (iQOO Z11) மாடலாகும். கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது க்ளோபல் லான்ச்சிற்கு தயாராகி வருகிறது.

அதாவது ஐக்யூ நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனை சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் ஆனது கீக்பெஞ்சில் காணப்பட்டுள்ளது. அதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது சைனீஸ் வேரியண்ட்டில் இருந்து சற்றே மாறுபட்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கலக்கல் காம்பினேஷனில் புது iQOO 5ஜி போன்.. 90W சார்ஜிங், 9020mAh!

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (@yabhishekhd) வழியாக கிடைத்துள்ள கீக்பெஞ்ச் லிஸ்டிங் விவரங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம். இது, க்ளோபல் வேரியண்ட் ஆனது சைனீஸ் வெர்ஷனில் இருந்து வேறுபட்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

ஒப்பீட்டளவில், சீனாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டு இயங்குகிறது. மேலும் கீக்பெஞ்ச் லிஸ்டிங் ஆனது, க்ளோபல் வேரியண்ட் ஆனது 12GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் வரும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பிடத்தக்க வண்ணம் சீன வேரியண்ட் 16GB வரை ரேம்-ஐ பேக் செய்கிறது.

சீனாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்:
- 165Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 சிப்செட்
- 16GB வரை ரேம் மற்றும் 512GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 6 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 9020mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங்

ஐக்யூவின் லேட்டஸ்ட் இந்திய அறிமுகத்தை பொறுத்தவரை, ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போனின் புதிய கலர் ஆப்ஷன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபெர்னோ ரெட் மற்றும் டைட்டானியம் குரோம் ஆகிய கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைத்தது. தற்போது இது ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் (Alpine White and Asphalt Black) ஆகிய 2 புதிய கலர் ஆப்ஷன்களை பெற்றுள்ளது.

ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் கலர் ஆப்ஷன்களின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.37,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்த போன் மே 5 ஆம் தேதி முதல் அமேசான்.இன் (Amazon.in), ஐக்யூ.காம் (iQOO.com) மற்றும் விவோ எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டுகளுடன் ரூ.3000 உடனடித் தள்ளுபடி கிடைக்கும் மற்றும் 6 மாதங்கள் வரை வட்டியில்லா இஎம்ஐ ஆப்ஷனின் கீழும் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78-இன்ச் (2800×1260 பிக்சல்ஸ்) 1.5கே AMOLED டிஸ்பிளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 1/1.95″ சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்ச்சர், OIS, LED ஃபிளாஷ் கொண்ட 50MP ப்ரைமரி கேமரா

- GC08A3-WA1XA சென்சார் கொண்ட 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் (எப்/2.2 அபெர்ச்சர், 4K 60 fps வரை வீடியோ பதிவு)
- 32MP செல்பீ கேமரா (எப்/2.45 அபெர்ச்சர், 4K 60 fps வரை வீடியோ பதிவு)
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 7000mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்.

Best Mobiles in India

English summary
iQOO Z11 Global Variant Specifications Leaked Snapdragon 7s Gen 4 9020mAh Battery Launching Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X