மொத்த மார்கெட் மிரளுது.. 3D டிஸ்பிளே.. 7000mAh+ பேட்டரி.. 90W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் மாடலாக வெளியாக இருக்கும் ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்களின் விவரங்கள் மார்கெட்டில் கசிந்ததை தொடர்ந்து இப்போது அதிகாரப்பூர்வமாகவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது குளோபல் வேரியண்ட்டை போல் இருக்காது. புதிய டிசைனில் வர இருக்கிறது.
ஐக்யூ இசட்11 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. 9020mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டது. ஆகவே, இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு எகிறியது. இதை டபுள் மடங்காக மாற்றும்படி, இந்திய வேரியண்ட் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் அரிசோன்டல் கேமரா டிசைனில் கிடைக்க இருக்கிறது.

அதாவது, குளோபல் வேரியண்ட்டில் பிளாட் டிஸ்பிளே கிடைத்தது. ஆனால், இந்திய வேரியண்ட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. அரிசோன்டல் டிசைனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொடுத்து இருக்கிறது. நைட் போட்டோகிராபிக்காக ஆரா எல்இடி இடம்பெற்றுள்ளது. இந்த டிசைனுடன் 2 கலர்களில் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, ப்ளூ மற்றும் கிரீன் ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த டிசைனுடன் கூடிய போஸ்டரை ஐக்யூ இந்தியா நிறுவனமானது, அதனுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டதால், இந்த மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இப்போது, கசிந்த பீச்சர்களை பார்க்கலாம்.
ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Octa Core Snapdragon 7 Gen 4) சிப்செட் மட்டுமல்லாமல், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 (Octa Core MediaTek Dimensity 7500) சிப்செட் பெயரும் கிடைக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சிப்செட்கள் பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க கூடியவையாகும்.
6.8 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்க இருக்கிறது. ஆரா எல்இடி கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டருடன் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.
90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh+ பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார், டைப்-சி ஆடியோவை எதிர்பார்க்கலாம்.
இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. அதேபோல ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் மார்கெட்டில் வெளியான பீச்சர்களை பார்க்கையில், 6.83 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே கிடைத்தது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
9020mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது. டிசைன் மற்றும் டிஸ்பிளேவை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரிாக இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications