போட்டு தாக்கு.. 9020mAh பேட்டரி, 12GB ரேம், 8.25mm ஸ்லிம் டிசைன்.. பட்ஜெட் விலை புது iQOO 5ஜி போன் அறிமுகம்!
ஐக்யூ (iQOO) நிறுவனம் பிரம்மாண்டமான 9,020mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது விரைவில் இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அது ஐக்யூ இஸட்11 5ஜி (iQOO Z11 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.
ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகமாகி விட்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) மாடலுடன் சேர்ந்து மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால்.. ஐக்யூ இஸட்11-ன் இந்திய அறிமுகம் குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனின் மலேசிய அறிமுகம் (விரைவில் இந்திய அறிமுகம்) மூலம், முதல் முறையாக ஐக்யூ நிறுவனம் அதன் ஸ்டாண்டர்ட் மாடலை சீனாவிற்கு வெளியே கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கும்போது, பேட்டரி லைஃப் தான் இதில் முக்கிய கவனம் என்பது தெளிவாக தெரிகிறது.
ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போனில் - பெரும்பாலான மக்கள் முதலில் கவனிக்கும் விஷயம் அதன் பிரம்மாண்டமான 9020mAh பேட்டரிதான். தற்போதைய தரநிலைகளின்படி பார்த்தாலும், இது வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவாகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஐக்யூ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை 8.25மிமீ ஸ்லிம் டிசைனிலும், 213 கிராம் எடையிலும் ஒப்பீட்டளவில் மெல்லியதாக வைத்துள்ளது.
ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனிற்கான சார்ஜிங் ஸ்பீட் 90W வரை செல்கிறது. மேலும் பைபாஸ் சார்ஜிங் (bypass charging) மற்றும் நீண்ட கால பேட்டரி ஹெல்த் பாதுகாப்பு (long-term battery health protection) உள்ளிட்ட சில கூடுதல் பேட்டரி தொடர்பான அம்சங்களும் இதில் உள்ளன.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பெரிய 6.83-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவும் உள்ளது. சில சூழ்நிலைகளில் இதன் ப்ரைட்னஸ் 5,000 நிட்ஸ் வரை எட்டக்கூடும் என்றாலும், வழக்கம் போல, இந்த எண்ணிக்கை புல் ஸ்க்ரீன் பயன்பாட்டை காட்டிலும் சிறிய எச்டிஆர் ஹைலைட்டுகளுக்கு (Small HDR highlights) பொருந்தும்.
சிப்செட்டை பொறுத்தவரை, இது சைனீஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட டைமென்சிட்டி 8500-க்கு பதிலாக குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப் உடன் வருகிறது. இந்த சிப்செட் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. நானோரிவியூவின் பெஞ்ச்மார்க் ஒப்பீடுகள் ஆனது - டைமென்சிட்டி 8500 குறிப்பிடத்தக்க அளவில் வலுவான சிபியு மற்றும் ஜிபியு செயல்திறனை வழங்குவதாக காட்டுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய வேப்பர் சேம்பர் கூலிங் அமைப்பும் உள்ளது. ஏனெனில் இந்தஸ்மார்ட்போன் ஓரளவு மொபைல் கேமர்களை இலக்காக கொண்டு நிலைநிறுத்தப்படுகிறது. கேமராக்கள் குறித்த அம்சங்கள் பேப்பரில் நன்றாக இருந்தாலும், உண்மையில் அவைகள் "முக்கிய விற்பனை அம்சம்" ஆக இல்லை. இதில் 50MP சோனி IMX882 ப்ரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 4K ரெக்கார்டிங் ஆதரவுடன் கூடிய 32MP செல்பீ கேமரா ஆகியவைகள் உள்ளன.
ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: மலேசியாவில், ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் RM1899 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.45600 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரும்போது, இவ்வளவு பெரிய விலை நிர்ணயம் இருக்காது.
ஏனென்றால் கடந்த மார்ச் 2026-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கு தான் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ஆக இந்தியாவிற்கு வரும்போது ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் அல்லது அதை சுற்றிய பட்ஜெட்டில் தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications