Home
Mobile

iQOO போட்டான் பாரு.. 29 சதவீத ஆஃபரில் 7050mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 7050mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி சோனி கேமரா, கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் வெளியான ஐக்யூ இசட்11 5ஜி (iQOO Z11 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலையானது, 29 சதவீத தள்ளுபடி போக ரூ.39,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,500 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.1,064 கேஷ்பேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக எந்த கார்டும் இல்லாமல் ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஈஎம்ஆ ஆப்ஷனில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு ரூ.4,750 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த சலுகைகளுடன் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் ஐக்யூ இசட்11 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். செலஸ்டியல் ப்ளூ மற்றும் அரோரா கிரீன் கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

iQOO போட்டான் பாரு.. 29 சதவீத ஆஃபரில் 7050mAh பேட்டரி.. 44W சார்ஜிங்!

ஐக்யூ இசட்11 5ஜி அம்சங்கள் (iQOO Z11 5G Specifications): 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7500 Turbo 4nm) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஆரா லைட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ இசட்11 5ஜி இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவுடன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7050mAh பேட்டரியை கொடுக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைப்பதால், ஓரளவுக்கு ஸ்லிம் லுக் கொடுக்கிறது. ஏனென்றால், 7.99 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. 199 கிராம் எடை கொண்ட மாடலாக கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை இந்த ஐக்யூ இசட்11 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைப்பதால், பிரீமியமான டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங்குடன் இந்த ஐக்யூ இசட்11 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி உள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Z11 5G With 8GB RAM Gets 29 Percent Discount on Amazon Sale Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X