தீபாவளிக்கு அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.11,998 போதும்.. 6500mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு கிடைக்கிறது. ஆகவே, இதுவரையில் கிடைக்காத கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த கம்மி விலையிலும் 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா, 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்ட இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.13,499ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.16,499ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.12,998 ஆக இருக்கிறது.

இதுபோக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதே கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.11,998 பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம். மேலும் ரூ.12,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இதே போல மற்ற மாடல்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.
ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z10x 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் (2408 x 1080 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் ஐ கேர் புரொடெக்சன் (Eye Care Protection) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1050 நிட்ஸ் ஹை பிரைட்னஸ் மோட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military Grade Durability) கிடைக்கிறது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த டியூரபிலிட்டி கிடைப்பதால் டிஸ்பிளேவுக்கு வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) & கிரீஸி ஹேண்ட் டச் (Greasy Hand Touch) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது.
மேலும், 3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. ஐக்யூவில் வழக்கமாக கிடைக்கும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் ஏஐ டாக்குமெண்ட்ஸ் (AI Documents), ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation) போன்ற ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) மற்றும் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல ரியர் கேமராவில் 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி உள்ளது. அல்ட்ராமரைன் (Ultramarine), டைட்டானியம் (Titanium) கலர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








