Home
Mobile

அடித்து ஆடும் அமேசான்.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அடித்து ஆடும் அமேசான்.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்..  எந்த மாடல்?

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z10x 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408 × 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என டூயர் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு இந்த போனில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் கிடைக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) வசதியுடன் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங பயனர்களைக் கவரும் வகையில் மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 மூலம் இந்த ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

5ஜி (NSA), 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது. 6500mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10x 5G with 4GB RAM available at 3 percent discount on Amazon: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X