iQOO Z10x 5G ரிவ்யூ: ரூ.13,499 க்கு டபுள் வொர்த்னு சொல்ற அளவுக்கு இதுல உண்மையா அப்படி என்ன தான் இருக்கு?
சில மாதங்களுக்கு முன்பு வரையிலாக, ரூ.10,000 க்குள் மற்றும் ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமான 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது மவுசு அதிகமாக இருந்தன. ஆனால் அவைகளில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ரூ.10,000 என்கிற விலைக்குள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் சில-பல "சமரசங்களை" செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டன.
"அதை" எப்போது கஸ்டமர்கள் புரிந்துகொள்ள தொடங்கினார்களோ அப்போது முதல் என்ட்ரி-லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவில் "விலைக்கு ஏற்ற" ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக தொடங்கின. அந்த வரிசையில் ஐக்யூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன் தான் - ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G)!

4ஜி போனில் இருந்து 5ஜி-க்கு அப்கிரேட் ஆக விரும்பும் மற்றும் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை தேடும் வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாமா வேண்டாமா என்கிற கேள்வி அல்லது சந்தேகம் அல்லது குழப்பம் உங்களுக்குள் இருந்தால்.. இதோ எங்களுடைய ரிவ்யூ (iQOO Z10x 5G Review)!
டிசைன்: டைடாமியம் கலரில் உள்ள ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை நாங்கள் டெஸ்ட் செய்தோம் (இது அல்ட்ராமரைன் என்கிற கலரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது). பார்க்கும் போதே சட்டென்ற பிரீமியம் லுக்கை உறுதி செய்யும் இந்த ஸ்மார்ட்போன், கைரேகை பதியாத பேக் பேனலை கொண்டுள்ளது இன்னும் சிறப்பு. கேமரா ஐலேண்ட் சற்றே பெரிதாக இருந்தாலும் கூட, டூயல் கேமரா சென்சார்களுடன் உள்ள ஐஆர் பிளாஸ்டர், எல்இடி பிளாஷ் யூனிட் மற்றும் டைனமிக் லைட் - ஈடுசெய்யும்படி உள்ளன.

ரியர் கேமரா சென்சார்களுக்கு கீழ் உள்ள டைனமிக் லைட் ஆனது சார்ஜிங் செய்வது போன்ற சூழல்களில் வெவ்வேறு நிறங்களிலான கலர்களை கொண்டு பிளே செய்கிறது. சிலருக்கு நிச்சயம் இது பெரிய போனாக இருக்கலாம். ஆனால் நழுவுவதை பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனின் குவாட் கர்வ்டு பேக் எட்ஜ்கள் ஆனது ஸ்மார்ட்போனை கையில் வசதியாக வைத்திருக்க உதவுகின்றன.
சுவாரசியமாக இது ஐபி64 மதிப்பீடு மற்றும் இராணுவ-தர ட்யூரலிபிட்டி ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. ரூ.13,499 என்கிற விலையில் இது அரிதான அம்சங்களாகும். கூடவே வெட் ஹேண்ட் டச் மற்றும் கிரீஸி ஹேண்ட் டச் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. செல்பீ கேமராவிற்காக டிஸ்பிளேவின் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உள்ளது; அது சற்றே தடிமனான பெஸல்களை கொண்டுள்ளது. இருப்பினும் விலையை கருத்தில் கொண்டால், அதுவொரு பிரியா குறையாக இருக்காது. ஒட்டுமொத்தமாக இது சமநிலையான மற்றும் நவீன தோற்றத்தை அளிக்கும் ஒரு ஸ்மார்ட்போனாக உள்ளது.

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஐ கேர் டிஸ்பிளேவை (TÜV ரெயிண்லேண்ட் ஐ ப்ரொடெக்ஷன்) கொண்டுள்ளது. இது 6.72-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. எல்சிடி பேனல் ஆக இருந்தாலும் கூட இது நல்ல வியூயிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
இதன் 1050 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் ஆனது நிகழ்களில் தரமானதாகவும், வெளி இடங்களில் போதுமானதாகவும் உள்ளது. டச் ரெஸ்பான்ஸ் விரைவாக உள்ளது. கேமிங் மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு இந்த வேகம் போதுமானதாக இருக்கிறது. கேமிங்கின் போது, ஓடிடி மற்றும் வீடியோ வாட்சிங்கின் போது துல்லியமான வண்ணங்களை காண முடிகிறது.

பெர்பார்மென்ஸ் மற்றும் சாஃப்ட்வேர்: ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2.5GHz பீக் க்ளாக் ஸ்பீட் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது அன்டுடு-வில் சில உறுதியான எண்களை பெற்றுள்ளது (688,475 மதிப்பெண்கள்). ஐக்யூ இஸட்9எக்ஸ் மாடலில் உள்ள ஜிபியு உடன் ஒப்பிடும்போது இந்த சிப்செட்டின் ஜிபியு மிக வேகமாக உள்ளது. கேமிங் செயல்திறனில் நல்ல முன்னேற்றங்களை காண முடிகிறது.
யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் ஆனது ஸ்மூத் ஆன மல்டி டாஸ்கிங்கை உறுதி செய்கிறது. பல ஆப்களுக்கு மத்தியில் மாறினாலும் இது எந்த தடங்கலும் இல்லாமல் ஸ்மூத் ஆக செயல்படுகிறது. போதாக்குறைக்கு இது 8ஜிபி ரேம் + 8ஜிபி எக்டென்டட்ரேம் உடன் வருகிறது. ஆனால் எக்ஸ்பாண்டபிள் ஸ்டோரேஜ் இல்லை, இதை இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றாக கூறலாம்.

அடுத்த குறை ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பன்டச் ஓஎஸ் 15 இல் உள்ளது. இது ஏஐ ஏரேசர், ஸ்க்ரீன் டிரான்ஸ்லேஷன் மற்றும் பல ஏஐ அம்சங்களை கொண்டு வந்தாலும் கூட ப்ளோட்வேர் மற்றும் தொடர்ச்சியான ஸ்பேம் நோட்டிஃபிகேஷன்களால் சற்று கடுப்பேற்றுகிறது என்றே கூறலாம். ஆனால் யூஸர் இன்டர்பேஸில் பெரிய குறைகள் இல்லை.
முன்னதாக நீங்கள் எந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இருந்தாலும் (ஐஓஎஸ் தவிர்த்து), இது உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும். கூடவே கஸ்டமைஸ் செய்யும் விருப்பங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இங்கே கவனிக்கப்பட நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகளுக்கான மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும்.

கேமராக்கள்: முதலில் நல்ல விஷயங்களை பற்றி பேசி விடலாம் (இந்த விஷயத்தை பெர்பார்மென்ஸ் தலைப்பின் கீழ் கூட சொல்லி இருக்கலாம். இருந்தாலும் கேமராவின் கீழ் சொன்னால் தான் சரியாக இருக்கும்). கேமிங்கின் போது கூட ஓவர் ஹீட் ஆகாத சில ஸ்மார்ட்போன்கள் லாங் வீடியோ ரெக்கார்டிங்கின் போது ஓவர் ஹீட்டிங்கை சந்திக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் லாங் வீடியோ ரெக்கார்டிங்கின் போதும் கூடஹீட் ஆகவில்லை.
சரியான 15 நிமிடங்கள் நீளும் வீடியோ ஒன்றை ரெகார்ட் செய்து பார்த்தோம். அப்போதும் கூட இது ஹீட் ஆகவில்லை. இதற்கு இந்த ஸ்மார்ட்போனில் உள்ள லார்ஜ் கிராஃபைட் கூலிங் ஏரியாவிற்கு தான் நன்றி கூற வேண்டும். ஆனால் வீடியோ குவாலிட்டிக்கு வந்துவிட்டால் - சுமார் தான். ஸ்டேபிள் வீடியோ ரெக்கார்டிங் செய்தால் (குறிப்பாக 4கே மோட் இல்) உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஸ்டெடி ஆன ஹேண்ட் இல்லாதவர்கள் அல்லது மோஷன் வீடியோக்களில் ஆவரேஜ் ஆன குவாலிட்டி தான் கிடைக்கிறது.

ஆனால் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் போட்டோக்களின் குவாலிட்டியை "சுமார்" ன்று கூறிவிட முடியாது. இது 50எம்பி ப்ரைமரி ரியர் கேமராவையும், 2எம்பி டெப்த் கேமராவையும் கொண்டுள்ளது. மீண்டும் ஸ்டெடி ஆன ஹேண்ட் இருந்தால், கூடவே போட்டோ செட்டிங்ஸ் இல் சில மாற்றங்களை செய்ய தெரிந்து இருந்தால்.. நல்ல அவுட்புட்கள் கிடைக்கும்
பகல் நேரங்களில் எடுக்கப்பட்ட ஷாட்கள் நியாயமான டீடெயில்களுடனும், சற்றே துல்லியமான கலர்களுடனும் "ஏற்றுக்கொள்ளத்தக்க" அவுட்புட்களை வழங்குகின்றன. ஆனால் போர்ட்ரெயிட் போட்டோக்கள் எட்ஜ் டிடெக்ஷனில் சற்று தடுமாறுகிறது; குறிப்பாக தலை (முடிகள் உள்ளதால்) பகுதியில். க்ளோப்ஸ் அப் ஷார்ட்கள் ஓகே ஓகே வாக உள்ளன.

ஆனால் லோ லைட் போட்டோக்கள் வியக்கத்தக்க வகையில் உள்ளன. எந்தவிதமான கூடுதல் செட்டிங்ஸ்-ன் தேவைகளும் இல்லாமல் நல்ல டீடெயில் மற்றும் எக்ஸ்போஷரை-ஐ வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான யூசர்கள், தேவையான ஃபிரேமில், வெறுமனே ஷட்டர் பட்டனை கிளிக் செய்வதன் மூலமே நல்ல அவுட்புட்களை எதிர்பார்ப்பவர்களாக உள்ளதால், ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி கண்டிப்பாக அவர்களை திருப்தி அடைய செய்யாது. ரியர் கேமராவின் நிலை தான் 8எம்பி செல்பீ கேமராவிற்கும்!
பேட்டரி: 7300எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6500எம்ஏஎச் பேட்டரி தான் உள்ளது என்றாலும் கூட, இதே விலைப்பிரிவில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது, இதுவே ஒரு பெஸ்ட் செல்லிங் பாயிண்ட் ஆக இருக்கிறது. 6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள இந்தியர்களுக்கு ரூ.13,000 பட்ஜெட்டில் 6500எம்ஏஎச் பேட்டரி என்பது லட்டு சாப்பிடுவது போல இருக்கும்.

சோஷியல் மீடியா ஸ்க்ரோலிங், யூட்யூப் வீடியோ பிளேபேக் மற்றும் சாதாரண கேமிங் உள்ளிட்ட ரியல்-லைஃப் பயன்பாடுகளின் போது இது ஈர்க்கக்கூடிய பேட்டரி லைஃப்பை வழங்கியது. "ஹெவி யூசேஜ்" செய்யும் பட்சத்தில், அதாவது தொடர்ச்சியான முறையில் போட்டோ கேப்ச்சரிங், வீடியோ ரெக்கார்டிங், ஹெவி கேம்களை விளையாடுவது போன்றவைகளை செய்யும் போது "இது போதும்" என்கிற அளவிலான பேட்டரி லைஃப்பை வழங்கியது.
பேட்டரி டிபார்ட்மென்ட்டில் உள்ள சிறிய குறையான இதன் 44W பாஸ்ட் சார்ஜிங்கை கூறலாம். ரூ.13,499 க்கு இது போதுமான பாஸ்ட் சார்ஜிங் ஆக இருந்தாலும் 6500எம்ஏஎச் பேட்டரிக்கு தீனி போடும் அளவு வேகமானதாக இல்லை. 67W பாஸ்ட் சர்ஜிங்கை பயன்படுத்தும் எனக்கு 44W மிகவும் ஸ்லோவானதாக தெரிந்தது. 0 முதல் 50% வரை சார்ஜ் செய்ய இது 49 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. ஆக முழுமையாக சார்ஜ் செய்ய 1 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
கொஞ்சம் பொறுமையாக உட்காந்து சார்ஜ் செய்து கொண்டால், 1 நாளுக்கும் மேலான பேட்டரி லைஃப் உறுதியாக கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு பொறுமையாக சார்ஜ் செய்யும் சூழல் எப்போதுமே அமையாது என்றால், உங்களுக்கு ஓவர் நைட் சார்ஜிங் செய்யும் பழக்கம் இல்லை என்றால், கையில் ஒரு பவர் பேங்க் வைத்து கொள்வது நல்லது.
முடிவு: பேட்டரி லைஃப் தான் எனக்கு முக்கியம் என்பவர்கள் - ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். அதேபோல 4ஜி ஸ்மார்ட்போனில் இருந்து 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அப்கிரேட் ஆக விரும்பும் பயனர்களும் இதை நம்பி வாங்கலாம். பேட்டரி லைஃப் உடன் சேர்த்து நியாயமான பெர்பார்மென்ஸ்-ஐ தேடுபவர்கள் - கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனை தங்களுடைய டாப் 3 லிஸ்ட்டில் வைக்கலாம். மேற்கண்ட 2 புள்ளிகளுடன் சேர்த்து ஸ்டைல் ஆன லுக்கை வழங்கும் ஸ்மார்ட்போனை தேடுவபர்கள் - இதை நிச்சயம் கருத்தில் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாக ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு நல்ல மற்றும் பட்ஜெட் விலை ஆப்ஷன் ஆகும். இதன் பில்ட் குவாலிட்டி, 6500எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 7300 சிப்செட் மற்றும் யுஎப்எஸ் 3.1 ஸ்டோராஜ் போன்ற முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டால், இதை கண்டிப்பாக ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வைக்க முடியும்
எல்சிடி டிஸ்பிளே பிடிக்காது என்பவர்கள் அல்லது அதை வெறுப்பவர்கள் - 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் இதன் பீக் ப்ரைட்னஸ்-ஐ கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால் எல்சிடி டிஸ்பிளேவானது பேட்டரி லைஃப்பை விரைவாக காலி செய்யாது. இதற்காக நீங்கள் சமரசம் செய்யலாம். ஆனால் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போனை எதிர்பார்ப்பவர்களுக்கு சமரசம் செய்ய பெரிய காரணங்கள் இல்லை. இந்த பட்ஜெட்டில் இது "ஒழுக்கமானதாக" இருந்தாலும், இதை பெஸ்ட் என்று கூற மாட்டோம். கடைசியாக சமீபத்தில் அறிமுகமான விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா அம்சங்களும் இதிலும் உள்ளது என்பதையும், ஐக்யூ பிராண்ட் ஆனது விவோவின் துணை நிறுவனம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications








