ஏப்.22 முதல் ஆர்டர் தெறிக்குமே.. ரூ.13000 பட்ஜெட்டில் 5ஜி, 6500mAh பேட்டரி, 50MP கேம், 44W சார்ஜிங், IP64!
இவ்ளோ கம்மி பட்ஜெட்ல் இவ்ளோ பெரிய அம்சங்களா.. என்று இந்தியர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பிய ஐக்யூ இஸட் 10 சீரீஸ் (iQOO Z10 Series) ஸ்மார்ட்போன்கள் இன்று (2025 ஏப்ரல் 11 ஆம் தேதி) இந்திய சந்தையில் அறிமுகம் ஆகின.
இதன் கீழ் ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) மற்றும் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இங்கே ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை பற்றி விரிவாக பார்ப்போம். ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் என்ன? இதன் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: கடந்த ஆண்டு அறிமுகமான ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் எப்எச்டி பிளஸ் 120ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் பஞ்ச்-ஹோல் டிசைனில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ரியர் கேமராவில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது.
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) கொண்டு இயங்குகிறது. இது பெரிய 6500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்டு இயக்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு 2 ஆண்டுகள் மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழையும் பெற்றுள்ளது.
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2408 × 1080 பிக்சல்ஸ் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட்
- 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம், 128ஜிபி / 256ஜிபிசி UFS 3.1 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார், - எல்இடி ஃபிளாஷ், 4கே வீடியோ பதிவு ஆதரவு
- எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரி
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- ஐபி64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன்
- 5ஜி (NSA) மற்றும் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- அளவீட்டில் 165.7×76.3×8.09மிமீ
- எடையில் 204 கிராம்
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். இது வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான ஐக்யூ இந்தியா இஸ்டோர் (iQOO India eStore) வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications